என்ன சாதித் தீ ர்

என்னவளை என் சதி ஆக விடாமல் செய்வது விதியின் சதியா? இல்லை தரங்கெட்ட
சில மனிதரின் சதியா?என் குலம் தீண்டாதோர் தகுதியா?
இது மனதோடு மோதிப் பார்க்கும் வியாதியா? இல்லை,
மனிதத்தின் சாதி பார்க்கும் சிலரின் நியதியா? நான் அவளுக்கு ஆகாப் பதியா?
சாதித் தீ என் மனமெரிக்க
இனி நான்'சுதி' ஏற்றி என் வாழ்வில் ஜதி மாறி கால் தடம்
பதிக்கவோ? அவளை என் இணையாக்கிக் கொள்ள
மன்மத கணை வீசும் ஆசைக்கு அணை போடத்தான்
வேண்டுமோ? மாட்டேன்,இனி
'செஞ்சி' ஆண்டோன் வீரம்
கொண்டு 'வஞ்சி'யவளை காதல் 'வஞ்சி'ப்போரிடமிருந்து
மீட்பேன்,கொஞ்சிப்பேசுவேன்,
மிஞ்சிப் போய் எது சூழ்ந்தாலும்
வீழ்ந்துவிட மாட்டேன்,வாழ்ந்து
காட்டுவேன்,சாதி வெறியரிடம்
தாழ்ந்து போகாத் தரணி படைப்பேன்.🌻(தொடரும்)

எழுதியவர் : பாலமுருகன்பாபு (30-Jan-18, 11:55 am)
சேர்த்தது : பாலமுருகன்பாபு
பார்வை : 45

மேலே