பாலமுருகன்பாபு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாலமுருகன்பாபு |
இடம் | : கருமத்தம்பட்டி,கோவை |
பிறந்த தேதி | : 06-May-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 94 |
புள்ளி | : 8 |
பத்தாவது படிப்பு,
பனியன்கம்பனி
வேலை.
சொல்கலை
காரணம் தேடி மதுவருந்தி பின் உடல் கெட்டு நலம் நாடி
மதிவருந்தி என்ன பயன்?
அன்று வெள்ளையன் கொடுத்தான் விடுதலை!
இன்று சாதிக் கொள்ளையன்
கொடுக்கிறான் தண்டனை!
🌸🌸
மனம் போன போக்கில் கூட
போகலாம்! ஆனால் சாதிவெறி
இனம் போன போக்கில் போகக் கூடாது!
எங்கே செல்கிறாய் நல் மதியுற்ற இளைஞனே?!
உனக்குள்ளும் இருக்கிறான்
விதி மாற்றும் கலைஞனே!
பாரதத் தாய் என்மேவ்
ஜதி கெட்டு பரதமாடும் பாதகர்
கண்டாயா?எங்கே போனது உன் மறம்? முறத்தால் புலி
விரட்டிய மறத்தமிழச்சி
மகனல்லவா நீ?மரத்துப் போகுமோ உன் மறம்?
விதி மாற்றும் மதி உன்னுடன்
இருக்க,திரவியம் தேடி உன்
திறமை விற்க திரை கடல்தாண்டுவது ஏனடா?
உன் பால் என்பால் புகட்டியது
மெய்யென்றால், உன் மெய்
வளைத்து திறம்பட திறமை
காட்ட இந் நாட்டில் வழி பல உண்டு கேளடா! உன் கோளொன்றும் கேடில்லை காணடா!🌸
உன்னுடலில் உள்ளது வெறும்
சதையல்ல,பசுமைப் புரட்சியின் விதை! அதை நற்கருத்தாய் மக்கள் மனதிலே விதை!எளியோரிடம் தாயாக
வினை விதைத்தவர் வினை
அறுத்தார்! தினை விதைத்தவர்
தினை அறுத்தார்!.
உனை,எனை விதைத்தவர்
எதை அறுத்தார்! இணை சேர்ந்த நம் காதலை கருவறுத்தார்! இன மான வெறியில் நம் உயிரறுத்தார்!
வினை மனம் கொண்ட அவர்
காதலுக்குப் பொருந்தார்!
அவரை ஒறுத்தாலன்றி திருந்தார்! இவ்வுலகம்
வெறுத்தாலன்றி வருந்தார்!
சாதிதனை மறந்தார் என்றும்
மேதினியில் சிறந்தார்!
இல்லை அவர் உயிரிருந்தும்
இறந்தார்! அவர் என்றும் மனிதநேயம் இரந்தார் நிலையிருந்தார்!
வினை விதைத்தவர் வினை
அறுத்தார்! தினை விதைத்தவர்
தினை அறுத்தார்!.
உனை,எனை விதைத்தவர்
எதை அறுத்தார்! இணை சேர்ந்த நம் காதலை கருவறுத்தார்! இன மான வெறியில் நம் உயிரறுத்தார்!
வினை மனம் கொண்ட அவர்
காதலுக்குப் பொருந்தார்!
அவரை ஒறுத்தாலன்றி திருந்தார்! இவ்வுலகம்
வெறுத்தாலன்றி வருந்தார்!
சாதிதனை மறந்தார் என்றும்
மேதினியில் சிறந்தார்!
இல்லை அவர் உயிரிருந்தும்
இறந்தார்! அவர் என்றும் மனிதநேயம் இரந்தார் நிலையிருந்தார்!