மீ. முத்துசுப்ரமண்யம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மீ. முத்துசுப்ரமண்யம் |
இடம் | : ராஸ்வெல், ஜியார்ஜியா, யூ. எ |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 1749 |
புள்ளி | : 13 |
முன்னாள் பொறியியல் பேராசிரியர். தமிழ் குறுக்கெழுத்துப் புதிர் அமைக்கும், விடுவிக்கும் பொழுதுபோக்கு.
http://muthuputhir.blogspot.com/
http://kadavulpunniyam.blogspot.com/
பின்னணி:
சில தமிழ்ச் சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் விளக்கமோ, மூலமோ
சரியாகக் கிடைப்பதில்லை. என் சிந்தனையில் இந்த மாதிரி சில
சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் இப்படி (சற்று மாறான, புதிய) விளக்கம் இருக்குமோ என்று தோன்றுகிறது. அவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
உதாரணங்கள்:
1) சில சொற்கள்/சொற்றொடர்கள்:
அக்கு வேறு, ஆணி வேறு
கொள்ளுத் தாத்தா/பாட்டி/ பெயரன்/பெயர்த்தி (பேத்தி)
2) பழமொழிகள்:
அதிகப் படித்த மூஞ்சூறு காடிப்பானையில் விழுந்ததாம்.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவன்
*****************************************************************************
அக்கு வேறு, ஆணி வேறு
சுருக்
சொல்கலை கலைந்த சொற்கள்
சொல்கலை
சூழல் 11:
இங்கிலாந்தில் கார் ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் முறையாகப் பயிற்சி
எடுத்தபின்பே ஓட்டுனர் உரிமம் வாங்க முடியும்.
இன்று எனது ஊருக்கு அருகிலுள்ள நாச்சிகுளத்தைச் சேர்ந்த, மதுரையிலிருந்த,
தற்சமயம் லண்டனில் பணியாற்றும் டாக்டர் நண்பர் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.
அப்பொழுது இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவருடன் பணிபுரிந்து, லண்டனில்
கார் ஓட்டிய அவரது டாக்டர் நண்பரின் அனுபவத்தைச் சொன்னார்.
BUS LANE ல் வாரநாட்களில், திங்கள் முதல் வெள்ளி வரை, பிற வாகனங்கள்
செல்லக்கூடாது. சனி, ஞாயிறு நாட்களில் போகலாம் என்றும் இருந்திருக்கிறது.
திடீரென்று ஒரு குறிப்பிட்ட நாளி
பாழ்மனையுந் தேவ குலனுஞ் சுடுகாடும்
ஊரில் வழியெழுந்த வொற்றை முதுமரனுந்
தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்
நோயின்மை வேண்டு பவர். 57 ஆசாரக் கோவை
பொருளுரை:
நோய் இல்லாது இருப்பதை விரும்புபவர்கள் பாழான வீட்டினுள்ளும்,
கோயில்களுக்குள்ளும், சுடு காட்டிலும், ஊரில்லாத இடத்தில் வளர்ந்திருக்கும்
ஒற்றை முற்றிய மரத்திற்கடியிலும் தாமே ஒருவராக போகார்.
பகற்பொழுதில் தூங்க மாட்டார்.
கருத்துரை:
பாழ் வீடு, சுடுகாடு, கோயில்கள், தனித்த பாழ் மரம்
இவற்றினிடத்துத் தனித்துச் சேராமலும் பகலில்
தூங்காமலுமிருப்பதும் நோயில்லாதிருப்பதற்கு ஏதுவாகும்.
முதுமரம் - ஆலமரமுமாம்.
பொருளுரை:
நான் எவ்வளவு வேண்டிக் கொண்டும் ராகவ!
உனக்கேன் இப்பிடிவாதம் ஓ ராகவ?
என் கவலையைத் தீர்ப்பதற்கு உனக்கு இத்தனை பிகுவா?
ஆத்ம ரூபனே! என்னருகில் வராமல் (உனக்கேன் இப்பிடிவாதம்?)
என் சித்தமிசை உன்னைத் தரிசிக்கும் சுகமே
மேலானதென்று மகிழ்ந்திருக்கிறேன்.
அனைத்திற்கும் சாரமானவனே!
உன்னை முற்றிலும் நம்பினேன்.
ஒருவனைப் பணியாதுலகாள்பவனே, ஸ்ரீ த்யாகராஜனே!
பாடல்:
பல்லவி:
எந்தவேடு கொந்து ராக வ
பந்தமேலரா ஓ ராக வ (எந்த)
அனுபல்லவி:
சிந்த தீ ர்ச்சுட கெந்த மோடி ரா
அந்தராத்ம நாசெந்த ராகநே (எந்த)
சரணம்:
சித்தமந்து நிந்நு ஜூசு சௌக் யமே
உத்தமம்
தெய்வாதீனம் 2: கடைசி நொடியில் கிடைத்த உதவித் தொகை.
அயல் நாடு சென்று பட்ட மேற்படிப்பு படித்து முனைவர் பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று ஒரு வெறி என்னுள் நுழைந்து விட்டது. அந்த வெறியில் நான் செய்த - இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அடி முட்டாள் தனமான - செய்கைகளும், கடைசி நிமிடத்தில் தெய்வீக அருள் வந்து காப்பாற்றியதையும் மறக்கவே முடியாது.
இந்த வெறிக்கு வித்திட்டவர் ஒரு கட்டட வேலை காவல்காரர்! பள்ளி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்பா சென்னையில் வீடு கட்டிக் கொண்டிருந்த சமயம். நானும், என் தம்பியும் அங்கு தினமும் சென்று வேடிக்கை பார்ப்போம். அப்படி ஒரு நாள் நான் அந்த இடத்தை நெருங்கும்