சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 5 எந்தவேடு கொந்து ராக வ – ராகம் ஸரஸ்வதி மனோஹரி
பொருளுரை:
நான் எவ்வளவு வேண்டிக் கொண்டும் ராகவ!
உனக்கேன் இப்பிடிவாதம் ஓ ராகவ?
என் கவலையைத் தீர்ப்பதற்கு உனக்கு இத்தனை பிகுவா?
ஆத்ம ரூபனே! என்னருகில் வராமல் (உனக்கேன் இப்பிடிவாதம்?)
என் சித்தமிசை உன்னைத் தரிசிக்கும் சுகமே
மேலானதென்று மகிழ்ந்திருக்கிறேன்.
அனைத்திற்கும் சாரமானவனே!
உன்னை முற்றிலும் நம்பினேன்.
ஒருவனைப் பணியாதுலகாள்பவனே, ஸ்ரீ த்யாகராஜனே!
பாடல்:
பல்லவி:
எந்தவேடு கொந்து ராக வ
பந்தமேலரா ஓ ராக வ (எந்த)
அனுபல்லவி:
சிந்த தீ ர்ச்சுட கெந்த மோடி ரா
அந்தராத்ம நாசெந்த ராகநே (எந்த)
சரணம்:
சித்தமந்து நிந்நு ஜூசு சௌக் யமே
உத்தமம்ப நுசு உப்பொங்கு சுநு
ஸத்தமா த்ரமா சால நம்மிதிநி
ஸார்வபௌ ம ஸ்ரீ த்யாக ராஜநுத (எந்த)
யு ட்யூபில் Entha Vedukondu - Saraswati Manohari - Thyagaraja என்று பதிந்து R.சூர்யபிரகாஷ் பாடுவதைக் கேட்கலாம்.
யு ட்யூபில் Madurai Somu- Lalgudi- Sivaraman -Endaveduko- Ragam Saraswathi Manohari என்று பதிந்து மதுரை சோமசுந்தரம் பாடுவதைக் கேட்கலாம்.