நோய் உருவும் நாயுருவி

நோய் உருவும் நாயுருவி

உணவாக:

இதன் விதையைச் சிறிதளவு அரிசி கழுவிய நீரில் ஊறவைத்து உட்கொண்டு வர, மூலம், ஆசன வாய் சார்ந்த நோய்களுக்கு முட்டுக்கட்டை போடலாம். பாசிப்பருப்பை மெலிதாக வேகவைத்து, அதில் தக்காளி, வெங்காயம், பூண்டு, உப்பு, நாயுருவி இலைகளைப் போட்டு வதக்கி, கூட்டு போலச் செய்து அரிசி சாதத்தில் பிசைந்து சாப்பிட, நாவில் சுவையும் உடலில் ஊட்டங்களும் அதிகரிக்கும். இதன் இலைகளைப் பொரியல் போலவும் செய்து சாப்பிடலாம்.

மழைக் காலத்தில் துளிர்விடும் இளம் இலைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது. இருமலைத் தடுக்க, சவ்வாது மலைவாசிகள் இதன் வேர்ப்பொடியோடு, மிளகு சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிடுகின்றனர். சிறுநீரை அதிகமாக வெளியேற்றும் தன்மை உடையதால் வீக்கம், நீரடைப்பு போன்ற நோய் நிலைகளில் நாயுருவி சிறந்த மருந்து. வயிற்றுப் புண்ணைக் குணமாக்க, நாயுருவி, மிளகு, மண்டூரம் சேர்த்துச் செய்யப்படும் மருந்து, சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.

மருந்தாக:

ஹீமோகுளோபின், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாயுருவி உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எழுதியவர் : niharika (27-Jan-25, 10:54 am)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 6

மேலே