பிரியா விடை
நண்பர்களுக்கு வணக்கம்...வளரும் படைப்பாளிகள் தங்களை வளர்த்துக்கொள்ள... வளர்ந்த படைப்பாளிகள் தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நம் எழுத்து தளம் ஒரு அருமையான மேடை. சிறந்த படைப்புகள் அங்கீகரிக்கப்படத் தவறுவதேயில்லை இங்கு.. இருந்தும் சில உள் அரசியல் நிகழ்வுகளால் இன்னும் பல சிறந்த படைப்பாளிகள் படைப்பு அங்கீகாரம் பெறாதது வருத்தமாக இருக்கிறது.. ஏன்.. என் படைப்புகளுக்கு கூட விருது கொடுத்து அழகு பார்த்திருந்தது தளம்...!! இனி தளத்தில் நான் படைப்புகள் கொடுக்கப் போவதில்லை.. ஒரு வாசகனாக மட்டுமே வந்து செல்லப் போகிறேன். இதனால் யாருக்கும் பெரிய இழப்பு இல்லை என்றாலும் கூட சொல்லிவிட்டுச் செல்வது என்பது நான் தளத்திற்கு அளிக்கும் மரியாதை. இதுவரையில் என் படைப்புகளையும் படித்து கருத்துக்கள் பதிந்து என்னைச் செதுக்கிய தளத்திற்கும் ஏனைய தோழர்களுக்கும் நன்றி...!! வருகிறேன்..!

