சட்டத்தால் சரித்திரம் படைத்த நாள்
அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் சமம்
என்பதை எடுத்துரைத்த நாள்
தீண்டாமையை தீயிட்ட நாள்
அடிமையிலிருந்து மீண்டு அறிவினை கொண்டு அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்கி அகிலமே வியக்கும் அறிவினை உடையவர்கள் இந்தியர்கள் என்று இறுமாப்பு அடைந்த நாள்
அன்னல் அம்பேத்கர் அவர்களின் அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் பொதுவுடைமையும் சமத்துவத்தையும் படைத்த சரித்திர நாள்
எளிய வருக்கும் எல்லாருக்கும் சட்டம் சமம் என்று எடுத்துரைத்த நாள்
இந்த நாள் மட்டுமன்று
இனி வரும் எல்லா நாட்களிலும்
நாம் அனைவரும் இந்தியர்கள் என்றும்
நமது தாய்நாட்டின் தண்ணிகரற்ற சட்டத்தை மதிப்போம்
சட்டத்தினை பின்பற்றுவோம்
சட்டத்தினை காப்போம்
சகோதரத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழ்வோம் !!!