பாரதத்தாய் வாழ்க

நிகரற்றத் தலைவர்கள் வழிநடத்தினர்
எண்ணற்ற தொண்டர்கள் உயிர் கொடுத்தனர்
அடிமை வாழ்வு ஈனம் என்று தெளிவு கண்டனர்
அஹிம்சை எனும் வாளேந்தி போர் தொடுத்தனர்

சுதந்திரத்தை பெற்ற பின்னர் சுரம் இழந்தனர்
சாதி சமய வேற்றுமையில் விழுந்து உழன்றனர்
இடையிடையே முனிகள் தோன்றி அறிவுரைத்தனர்
இருந்தாலும் விஷமிகள் பலர் மாற்றம் வெறுத்தனர்

இந்த நாளில் நாட்டின் நிலைமை மாறி வருகுது
சாதி இனம் மொழி கடந்து ஜனங்கள் வாழுது
பொருளாதாரம் ஓங்கியே நம் நாடு மிளிருது
வல்லரசாய் உலகில் ஒளிர மிகவும் விழையுது

ஆங்காங்கே பெண்களுக்கு அநீதி நேருது
இதைத்தாண்டி பெண் வர்கம் ஓங்கி வளருது
விவசாய உற்பத்தி திருப்தி அளிக்குது
தொழிற்சாலை பொருள்வளமும் அதிகரிக்குது

வள்ளுவரின் திருக்குறளை போற்றி வாழ்த்துவோம்
வள்ளலாரின் கொள்கை கொண்டு நாமும் வாழுவோம்
அறிவில் உயர கல்வியதன் பெருமை உணருவோம்
நேர் வழியில் காசும் பணமும் இனிது ஈட்டுவோம்

சுத்தம் சுகாதாரம் என்ற பண்பை நாடுவோம்
வாய்மை நேர்மை மந்திரத்தை தினமும் ஓதுவோம்
நமது கோவை சிறந்துவிளங்க ஒன்றுகூடுவோம்
பாரதத்தாய் வாழ்கவென்று ஆடிப்பாடுவோம்

வாழ்க தமிழகம்
ஓங்குக பாரதம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Jan-25, 4:27 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 12

மேலே