எமது தேசம் பாரதம்

எமது தேசம் பாரதம் எமக்கு இது பெருமிதம்
ஜனநாயக குடியரசாய் திகழுகின்ற அற்புதம்
மொழிகள் வேறு முறைகள் வேறு
உணவு முறையும் வேறு வேறு
இருந்தபோதும் ஒற்றுமைதான் நம் நாட்டின் ஆணிவேரு

(எமது தேசம் பாரதம் எமக்கு இது பெருமிதம்
ஜனநாயக குடியரசாய் திகழுகின்ற அற்புதம்)

காந்திஜியின் கொள்கைகளை போற்றும் பாரதம்
காமராஜர் வாய்மையினை வாழ்த்தும் பாரதம்
அகில உலக நாடுகளும் வியக்கும் பாரதம்
வறுமை நிலை குறைந்து வரும் நல்ல பாரதம்
அருமையான கலாச்சாரம் நிறைந்த பாரதம்

வாங்க வாங்க நாமும் சேர்ந்து ஆடிப்பாடலாம்
பேதமின்றி நாம் உழைத்தால் உலகில் சிறக்கலாம்

(எமது தேசம் பாரதம் எமக்கு இது பெருமிதம்
ஜனநாயக குடியரசாய் திகழுகின்ற அற்புதம்)

உலக சபையில் இந்தியாவின் பெருமை பெருகுது
அமைதி தரும் நம் தியானத்தை உலகம் மதிக்குது
பொருளாதார வளர்ச்சி எங்கும் விரிந்து ஓங்குது
அக்கம்பக்க நாடுகளும் தோழமை நாடே
கேடு நினைக்கும் நாடுகளுக்கு விளைந்திடும் கேடே

வாங்க வாங்க நாமும் சேர்ந்து ஆடிப்பாடலாம்
பேதமின்றி நாம் உழைத்தால் உலகில் சிறக்கலாம்

(எமது தேசம் பாரதம் எமக்கு இது பெருமிதம்
ஜனநாயக குடியரசாய் திகழுகின்ற அற்புதம்)

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Jan-25, 4:29 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 9

மேலே