வார்த்தை விளையாட்டுத் தொகுப்பு ஆன்லைன் விளையாட்டு

(Game Online)

https://muthuputhir.blogspot.com/2019/11/2019-2_9.html

விளையாட்டு விதிமுறைகள்:


க. குறுக்கெழுத்துப் புதிர்:
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: https://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.தம்ள

கா. சொல்கலை:
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த
வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துகளை
எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி
விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும்
துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்!
சீர் செய்த மூலச் சொற்களும், இறுதி விடையும் அனுப்ப வேண்டும்.
பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்.

கி. கலைமொழி:
ஓரிரு வாக்கியங்களின் எழுத்துகள் நெடுக்காகக் கலைக்கப் பட்டிருக்கின்றன.
எழுத்துக்களை நெடுக்காக (அதே பத்தியில் மேல் கட்டம் ஒன்றினுக்கோ
கீழ்க்கட்டம் ஒன்றினுக்கோ) இடம் மாற்றி மறைந்திருக்கும் செய்தியைக்
கண்டு பிடிக்க வேண்டும்.

கீ. எழுத்து சுடோகு:

இங்கு காணப்படும் சுடோகு புதிரை விடுவிக்கவும்.
1. கொடுக்கப்பட்டிருக்கும் ௯ எழுத்துக்களையும் பயன் படுத்த வேண்டும்.
2. குறுக்காகவும், நெடுக்காகவும் ஒரு வரிசையில், ஒரு எழுத்து ஒரே
முறை தான் இருக்க வேண்டும்.
3. இங்கு காணப்படும் 9 சிறு கட்டங்கள் ஒவ்வொன்றிலும் 9 மிகச் சிறு
கட்டங்கள் இருப்பதைக் காணலாம். அவை ஒவ்வொன்றிலும்
கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களும் ஒரே ஒரு முறை தான்
இருக்க வேண்டும்.
4. சுடோகுவை முடித்த பின், இவ்வாறு சாயம் பூசப்பட்ட கட்டங்களிலிருக்கும்
எழுத்துகளைச் சீர் செய்து சரியான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான குறிப்பு: பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவன்
இறுதி விடையைப் பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்

Close (X)

சேர்த்தவர் : மீ. முத்துசுப்ரமண்யம் நாள் : 13-Nov-19, 12:59 am

தொடர்புடைய பயனர் விளையாட்டுகள்


Play வார்த்தை விளையாட்டுத் தொகுப்பு Game Online. (வார்த்தை விளையாட்டுத் தொகுப்பு ஆன்லைன் விளையாட்டு)



மேலே