நிஷா - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : நிஷா |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 1655 |
புள்ளி | : 1262 |
விடியாத இரவுகளில்
தலையணையோடு
பேசிக்கொள்ளும்...
தனிமை சுகமானது.....
யார் பேசும்
வார்த்தைகளும் கேட்காத
இரவின் நிசப்தம்...
இனிமையானது....
சுவர்க்கடிகாரம் மட்டும்
என்னோடு
சுவாசித்துக் கொண்டிருக்கும்..
அது சுகமானது....
அந்த கடிகார முட்கள் நகரும்
ஒவ்வொரு இடைவெளியும்
உன் நினைவில் என் மனம்
தவித்துக் கொள்ளும்...
அது மிக அழகானது...
எங்கோ நீ இருந்தாலும்
உன்னிதயம் மட்டும் ..
என்னுடனே துடித்துக்
கொண்டிருக்கும்..
அது அதிசயமானது.....
விடியாத இரவுகளில்
தலையணையோடு
பேசிக்கொள்ளும்...
தனிமை சுகமானது.....
யார் பேசும்
வார்த்தைகளும் கேட்காத
இரவின் நிசப்தம்...
இனிமையானது....
சுவர்க்கடிகாரம் மட்டும்
என்னோடு
சுவாசித்துக் கொண்டிருக்கும்..
அது சுகமானது....
அந்த கடிகார முட்கள் நகரும்
ஒவ்வொரு இடைவெளியும்
உன் நினைவில் என் மனம்
தவித்துக் கொள்ளும்...
அது மிக அழகானது...
எங்கோ நீ இருந்தாலும்
உன்னிதயம் மட்டும் ..
என்னுடனே துடித்துக்
கொண்டிருக்கும்..
அது அதிசயமானது.....
சில நினைவுகளோடு
பேசிக் கொண்டிருப்பேன்
அடிக்கடி....
என்னையும் மீறி
அழகான உன் பெயரை
ஆயிரம் முறை உச்சரிக்கும்
என் உதடுகள்...
இதுதான் காதலா.....?
உன்னைப் பார்க்கும் நிமிடங்களில்
உற்சாகம் உடல்முழுக்க மின்சாரமாய்
உதடுகளில் புன்னகையாய்....
உளறித் தொலைப்பேன்
எதைப் பேச என்று தெரியாமல்...
இதுதான் காதலா....?
நீ இல்லாத நேரங்களில்..
ஏனோ ஒரு வெறுமை
எனைச் சுற்றி வட்டமிடும்..
வார்த்தைகள் முட்டிக் கொள்ளும்.
கண்ணீர் தொண்டைக்குள்
முள்ளாய் குத்தும்....
இதுதான் காதலா....?
சில நினைவுகளோடு
பேசிக் கொண்டிருப்பேன்
அடிக்கடி....
என்னையும் மீறி
அழகான உன் பெயரை
ஆயிரம் முறை உச்சரிக்கும்
என் உதடுகள்...
இதுதான் காதலா.....?
உன்னைப் பார்க்கும் நிமிடங்களில்
உற்சாகம் உடல்முழுக்க மின்சாரமாய்
உதடுகளில் புன்னகையாய்....
உளறித் தொலைப்பேன்
எதைப் பேச என்று தெரியாமல்...
இதுதான் காதலா....?
நீ இல்லாத நேரங்களில்..
ஏனோ ஒரு வெறுமை
எனைச் சுற்றி வட்டமிடும்..
வார்த்தைகள் முட்டிக் கொள்ளும்.
கண்ணீர் தொண்டைக்குள்
முள்ளாய் குத்தும்....
இதுதான் காதலா....?
மறத்து போன சில உணர்வுகளை
மலரச் செய்யும் புது மொழி ...
காதல்....
தளர்ந்து போன மனதினை
தளிர்விடச் செய்யும் புது வேகம்..
காதல்....
இசைக்க மறந்த வீணையின்
இதயம் வருடும் புது நாதம்...
காதல்...
நினைக்க மறந்த இதயத்தை
சிலிர்க்கச் செய்யும் புது பனித்துளி...
காதல்....
விலக நினைக்கும் போதெல்லாம்
விரும்பி வரும் புது சுகம்....
காதல்...
எங்கோ நீயிருக்க...
ஏனோ அடிக்கடி
நினைத்துக் கொள்கிறேன்...
நீ எப்படி இருக்கிறாய் என்று....??
உன்னருகில் நானிருப்பதாய்..
உணர்வுகளில் சேர்ந்திருப்பதாய்...
ஒவ்வொரு நிமிடமும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....
உறக்கமில்லா என் கண்கள்....
உன் பெயரை உச்சரிக்கும்
என் இதழ்கள்....
உயிர் பிரியும் வேதனையை
உணர்வாயா நீ......?
என்றாவது எனை நினைப்பாயா
நித்திரையில் என் நினைவை
சுமப்பாயா.....
நானறியேன்....
ஆனாலும்
உன் நினைவுகள்
எனக்குள் சுமையாய் அல்ல
சுகமாய் இனிக்கிறது
என்றென்றும்.....
வலி சுமக்கும் விழிகளின் விண்ணப்பம்...
கவி எழுதும் விரல்ககளுக்கு
புரிந்திடுமா....
காலத்தின் கட்டாயம்
கண்ணீரில் நம் சுவாசம்....
என்றோ ஒருநாள்..
கண்ணீர் தாளாமல்...
உன்னிடம் பெற்ற கைக்குட்டை
விரலோடு விமர்சித்துக் கொண்டிருக்கிறது....
வலி சுமக்கும் விழிகளின் விண்ணப்பம்...
கவி எழுதும் விரல்ககளுக்கு
புரிந்திடுமா....
சில நிமிட இடைவெளியில்...
சிந்திக்க விடாமல்...
சிதறும் கண்ணீர்முத்துக்கள்...
நம் அன்பின் காணிக்கையாய்...
கைக்குட்டையை ஈரமாக்கிக் கொண்டிருக்கிறது....
அன்பிற்கான அதீத அடையாளமாய்...
வலி சுமக்கும் விழிகளின் விண்ணப்பம்...
கவி எழுதும் விரல்ககளுக்கு
புரிந்திடுமா....
எங்கோ நீயிருக்க...
ஏனோ அடிக்கடி
நினைத்துக் கொள்கிறேன்...
நீ எப்படி இருக்கிறாய் என்று....??
உன்னருகில் நானிருப்பதாய்..
உணர்வுகளில் சேர்ந்திருப்பதாய்...
ஒவ்வொரு நிமிடமும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....
உறக்கமில்லா என் கண்கள்....
உன் பெயரை உச்சரிக்கும்
என் இதழ்கள்....
உயிர் பிரியும் வேதனையை
உணர்வாயா நீ......?
என்றாவது எனை நினைப்பாயா
நித்திரையில் என் நினைவை
சுமப்பாயா.....
நானறியேன்....
ஆனாலும்
உன் நினைவுகள்
எனக்குள் சுமையாய் அல்ல
சுகமாய் இனிக்கிறது
என்றென்றும்.....
தொலை தூரத்தில் இரயிலின் ஓசை
தூரமாய் சுற்றும் பட்டாம்பூச்சி
துள்ளி குதிக்கும் புள்ளிமான்கூட்டம்
துதி பாடும்.தூக்கணாங்குருவி...
.....எனக்குள்ளே
தொலைந்து போன அன்பின் ஏக்கம்
கருவிழியில் காதல் பார்வை
கண்ணுக்குள்ளே மழலை மொழி
கருங்கல்லால் சிறு காவியம்
கண்ணீரில் ஒரு காதல் கவிதை...
கடந்து போன நினைவின் வலி....
மருகித் துடிக்கும் மனதின் ஏக்கம்
மறுபடி மறுபடி பிறந்திட துடிக்கும்
அழித்திட இது காகிதமல்ல...
அழகாய் இறைவன் வரைந்த
வாழ்க்கை காவியம்...
அழகான உணர்வொன்று
எனக்குள்
உருவாக நீ காரணமானாய்...
அசைந்தாடும் மலரோடு
நான் பேச...
நீ சந்தர்ப்பம் தந்தாய்.....
சுகமாக சுவாசிக்கும்
வண்ணத்துப்பூச்சி...என்னுள்
வட்டமடிக்க வைத்தாய்.....
நெடுதூரம் நடந்து போய்
நிழலோடு நான் பேச...
நீ புது பாதை தந்திட்டாய்...
விரல் பார்த்து நடக்கும் என்
விடிகாலை பொழுதை...
விலகாத உன்னினைவில் ...
வாழ்ந்திட வைத்தாய்...
கருநீல மேகங்கள் தொட்டு
காதல் சொல்லும் ...
கற்பனையை என்னுள்
கசிய வைத்தாய்....
எப்படி உன்னால் முடிந்தது
இத்தனையும்?.....
உன்னை காணாமல் இருந்திருக்கலாம்
பார்த்து விட்டேன் என்ன செய்ய
என்னை தொலைக்காமல் இருந்திருக்கலாம்
தொலைத்து விட்டேன் என்ன செய்ய
உன்னை ரசிக்காமல் இருந்திருக்கலாம்
ரசிகனாகிவிட்டேன் என்ன செய்ய
உன்னை நேசிக்காமல் இருந்திருக்கலாம்
சுவாசித்துவிட்டேன் என்ன செய்ய
உன்னை தரிசிக்காமல் இருந்திருக்கலாம்
பக்தனாகி விட்டேன் என்ன செய்ய
என்னை இழக்காமல் இருந்திருக்கலாம்
இழந்துவிட்டேன் என்ன செய்ய
உன்னைத் தேடாமல் இருந்திருக்கலாம்
தேடும்விழிகளை என்ன செய்ய
என்னை மீறாமல் இருந்திருக்கலாம் இப்போது
அழும்விழிகளை என்ன செய்ய
உன்னை நாடாமல் இருந்திருக்கலாம்
நாடும்மனதை என்ன செய்ய
எப்படி இருக்கிறாய். .......நீ
உனது ஒவ்வொரு நினைவுகளும்
உனது ஒவ்வொரு அசைவுகளும்
எனக்குள் .....
பரிச்சயம் ஆனது எப்படி?
தென்றலோடு மட்டுமே
பயணப்பட்ட தினங்களாய்....
உன் நினைவுகள் எனக்குள்
தித்திக்கிறதே........
முட்கள் மறந்து போன மலராய்
நான் மகிழ்ந்து போன
நிமிடங்கள் எனக்குள்
சிலிர்க்கிறதே....
சூர்யோதயம் தேடிடும்
சிறு பறவையாய்
சுற்றிய நாட்கள்..
சுகமாய் இனிக்கிறதே....
ஆனால் இன்று....
முட்டிக் கொள்ளும்
வான் மேகம் கொட்டிச் சென்ற
மழைத்துளிகளாய். என்
கண்ணீர்த்துளிகள்....உன்
உன்னதப் பரிசாய் எனக்குள்ளே....
இரவு பெய்த மழையின்
ஈரத்துளிகளாய்...
கண்ணீரை பரிசளித்து..