கௌரி சங்கர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கௌரி சங்கர் |
இடம் | : Home - Oddanchatram |
பிறந்த தேதி | : 10-Aug-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 774 |
புள்ளி | : 75 |
எங்கிருந்து வந்தாயோ
என் நொடிகளையெல்லாம்
எடுத்து சென்றது
உன் நினைவுகள் .....
என்னை மறந்து
உன்னையே நினைக்கிறேன்
உன்னுடன் செல்ல சண்டையிட்டதை
எண்ணும் போது சிறிய சிரிப்புதான் சிதறுகிறது ......
முதல் பார்வையில் பூக்கும் காதல்கள் பல
ஆனால்
முதல் பார்வைக்காக ஏங்குகிறது
நம் காதல் .....
சுற்றமும் மறந்து
சொப்பனம் காண்கிறேன்
சற்றென்று என் நினைவுகள்
என்னை எழுப்பினால்
கண்கள் உன்னை தேடும் ;
கனவு என கூறி
தலையில் செல்லமாய் தட்டி
தலையணை கொஞ்சம் கட்டி கொள்கிறேன்
புதுவிதமான உணர்வு ....
இதழொரம் புன்னகைப் பூக்கும் போது
நம் காதல் என்றும்
வாடாமல் இருக்க ஏக்கம் கொள்கிறே
ஒரு பண்டிகை நாளன்று ...
கடைத்தெருவுக்கு போயாச்சு....
கையில் கொடுத்த இருபது ரூபாயும்
இருக்குதான்னு இருபது முறை பாத்தாச்சு...
இவ்வளவு தொகையில் என்ன பொருள் நான் வாங்க...
நல்லா இல்லனு ஒரு கடை ...
இந்த தொகையிலே இல்லனு ஒரு கடை....
இப்படி எல்லா கடை வாசலிலும் ஏறி இறங்கியாச்சு...
பெரிய சாமான் வச்சு நான் விளையாடிட ஒரு ஒத்திகை பார்க்கத்தானோ....
இந்த சின்ன சின்ன சாமானெல்லாம் நான் வாங்கினேனா?
இந்த வடிகட்டிய பார்த்ததும் வடிகட்டி நின்னுச்சு மனசு...
சாயங்காலம் அம்மா போடுற டீ...
என் பொம்மைக்கு அம்மாவாகி நானும் டீ
போடப்போறேன்னு...
காசு கொடுத்து வாங்கிட்டேன்......
இந்த வடிகட்டியும்..
பதுமை அரசு கொண்ட
பைத்திய நாட்டில் -
புதுமை ஆயிரம் புதுப்பிக்காவிட்டாலும்,
தன்னை பித்தன் என்று பொய் கூறி
பணம் பார்க்கும் பிணமோ
அரசியல்வாதி,
பதவி,பாவம் இதை தவிர இவனிடம்
சட்டம் ஒன்றும் இல்லை..........
ஆயிரம் வாய்தா தரலாம்
ஆனால், ஒரு வழக்கு கூட
முடியக்கூடாது என
கண்ணை மூடிக்கொண்டு
கண்ணாமூச்சி ஆடும்,
நீதி தேவதை,
முடியாத ஆயிரம்
வழக்குகள்,வாய்தா
இதை தவிர
சட்டம் ஒன்றும் இல்லை...........
அவன் செய்வான்
இவன் செய்வான்-
என்று ஜோதிடம் பார்க்கும்
பொய் ஜோதிடன் தான்
மனிதன்
எதிர்பார்ப்பும்,ஏக்கமும்
தவிர இவனிடம்
சட்டம் ஒன்றும் இல்லை......
சட்டம் என்பது
நூல்
நான் நான் கண்ட கனவு இதுவென
அதுவாய் இருக்க -
இனிது இனிதாய் சேர்ந்த
இம்சைகளெல்லாம்
இம்மாத்திரத்தில்
நினைத்தால் கண்ணீரில் கல்லறை தெரியும் ,
அன்பால் சந்தித்த அவமானங்கள் ,
புன்னகையால் புன்பட்ட புருவங்கள் ,
அனைத்கையும் இழந்தேன் ;
என் ஆன்மாவை தொலைத்தேன் ,
தேடினேன் - ஆன்மாவை அல்ல
ஆண்டவனை
என்னை படைத்த ஆண்டவனை………
- கௌரி சங்கர்
ஆதரவற்றவர்களுக்காக துணி வாங்க வருபவர்களின் நிலை :
ஆசிரமத்தில் வேலை பார்ப்பவன் [வீடு வீடாக துணி வாங்குவது]. ஒரு வீட்டிற்கு பழைய துணி வாங்கப் போறான்.ஒரு வீட்டு கேட்டு தட்டி கூப்பிடுரான்.
வீட்டுக்குள்ள இருந்து ஒரு சத்தம் [lady] என்ன வேனும்.இவன் இந்த மாறி அனாதை ஆசிரமத்திலிருந்து வரேன்.பழைய துணி இருந்தா குடுங்கனு கேக்குறான்.அவ இல்ல இல்லனு சொல்ரா,இவன் அவள ஒரு மாரி பாத்துட்டு தலை குனிஞ்சர்ரான். அடுத்த வீட்டுக்குப் போறான்.
அப்ப பழைய பேப்பர் துணி வாங்கரவன் வரான்[அவன் பாசைல கூவிட்டு]அந்த lady கதவ திறந்து இருங்கனு சொல்லிட்டு பழைய துணி எடுத்துட்டு வந்து இவங்க கிட்ட போடுரா.இத (ஆசி) பாத்துக்கிட்
பரனே!நீர் கண்ட இடமெல்லாம்
விழிம்பின் வழியோடியது நீரோ?
நீரோடையில் நீந்திய பொன் நினைவுகள்,
சோயன்! கண்ட வயலும்,
ஓட்டன்! கண்ட குயிலும்,
நொடி சலியாமல் அழிந்தது;
நீர் தேவையை – நீர்
ஆண்டு கொண்டதால்
அழிந்து கொண்டது;
எள்ளா பெயரன் நீர் கிள்ளா போய் விடுவானோ?
நீந்திப் பார்க்காமல் – அவன்
உயிர் நீந்திடுமோ?
சரி, ஒரு வேலை
சிறு துளி நீரிலே துயில்வானோ?
வயல் காட்டில் ஓடாமல்
வயதாகங்காட்டில் ஓடிவிடுவானோ?
உயிர் மூச்சு நீங்குவதற்குள் நீந்தட்டும் நீரில் - ஒரு முறையாவது,
இதுவரை – நீரோடு நீ
இனிமேல் – நீரின்றி நீ ..............
அத்தை பெத்த அல்லிமலரே
அன்பு காதலன் நான்தான்டி..!
அந்திவான வெள்ளி நிலவாய்
அலைகிறேன் உனை வேண்டி..!
மனமகளாக உனை நினைத்து
மனம் முடிக்க நினைக்குறேன்டி..!
மனைவியாக வருவாய் என்று
மனதில் ஆசையே விதைக்குறேன்டி..!
உன் கண்ணில் எனை பார்க்க
என் கண்கள் கடவுளே வேண்டுதடி..!
உன் கனவில் நான் இருக்க
என் கவிகள் கடலாய் பெருகுதடி..!
உன் இமையின் இசை கேட்க
என் இதயத்தில் ஆர்வம் வெடிக்குதடி..!
உன் இதழின் பசி போக்க
என் இதழ்கள் ருசிக்க துடிக்குதடி..!
ஆதி முதல் அந்தம் வரை
என் ஆயுள் ரேகை நீதான்டி..!
ஆமாமென்று நீ சொன்னால்
ஆதாம் ஏவாலும் நாம்தான்டி..!
ஆமாமென்று நீ சொன்னாள்
ஆதாம் ஏவாலும் நாம்தான்ட