நீரின்றி நீ

பரனே!நீர் கண்ட இடமெல்லாம்
விழிம்பின் வழியோடியது நீரோ?
நீரோடையில் நீந்திய பொன் நினைவுகள்,
சோயன்! கண்ட வயலும்,
ஓட்டன்! கண்ட குயிலும்,
நொடி சலியாமல் அழிந்தது;
நீர் தேவையை – நீர்
ஆண்டு கொண்டதால்
அழிந்து கொண்டது;
எள்ளா பெயரன் நீர் கிள்ளா போய் விடுவானோ?
நீந்திப் பார்க்காமல் – அவன்
உயிர் நீந்திடுமோ?
சரி, ஒரு வேலை
சிறு துளி நீரிலே துயில்வானோ?
வயல் காட்டில் ஓடாமல்
வயதாகங்காட்டில் ஓடிவிடுவானோ?
உயிர் மூச்சு நீங்குவதற்குள் நீந்தட்டும் நீரில் - ஒரு முறையாவது,
இதுவரை – நீரோடு நீ
இனிமேல் – நீரின்றி நீ ..............
- கௌரி சங்கர்

எழுதியவர் : ச.கௌரி சங்கர் (13-Dec-17, 1:52 pm)
Tanglish : neerindri nee
பார்வை : 313

மேலே