*விவசா(யி)யம்

தன் மன நிறைவுக்கு அடுத்தவர்
வயிறு நிறைய உணவளித்தவன்...!
நிலை இன்று..?
நெடுவயல் நீர் நிறையக் கண்ட அவன்
கண்களில் கண்ணீர் நிறையக் கண்டேன்..!
வியர்வை உதிர்த்து விளைச்சல் எடுத்தவன்
உதிரம் உதிரக் கண்டேன்..!
விளைச்சலுக்கு விதை விறைத்தக் காலம்
மாறி கட்டிடங்கள் நிறையக் கண்டேன்..!
திமிலில் திமிர் ஏறியக் காளையெல்லாம்
அடிமாடுகளென அறுக்கக் கண்டேன்..!
இறுதியில்..!
உழுக் கலப்பையெல்லாம் உழவனின்
கழுத்துக்கு கயிறுயிட்டுக் காலனாக கண்டேன்.....!

#விவசாயம் #காப்போம்

எழுதியவர் : விஷ்ணு (13-Dec-17, 1:32 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 183

மேலே