வெண்ணிலவே வெண்ணிலவே வான்தவழும் வெண்ணிலவே

வெண்ணிலவே வெண்ணிலவே வான்தவழும் வெண்ணிலவே
கண்ணெதிரே வந்துவிட்டாள் காதலி வெண்ணிலவே
தேவையில்லை நீஎனக்கு தேய்நிலவே ஓடிமறை
பாவைமுன்நீ பால்நிலாதோற் பாய்

---இருவிகற்ப இன்னிசை வெண்பா

எதுகை ---வெண் கண் விகற்பம் 1 தேவை பாவை விகற்பம் 2

மோனை (பொழிப்பு ) ---1 ஆம் 3 ஆம் சீரில் வெ வா க கா தே தே பா பா
எட்டு வகை மோனைகளில் 1 ஆம் 3 ஆம் சீரில் மோனை பொழிப்பு மோனை எனப்படும்
எதுகை மோனை இன்றி பலவிகற்பத்திலும் இலக்கிய சிறப்பிற்கு முக்கியத்துவம்
கொடுத்து வெண்பா எழுதலாம்
எதுகை மோனை தொடை எனும் இலக்கண அழகு என்பர் தொன்நூலார்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Nov-24, 10:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே