நேசிப்பாயா பின்னும் நீ மாசிலாயென் வெண்ணிலாவே

ஈசிச்சேர் மூத்தோரின் எக்காளம் அங்கலாய்ப்பு
தூசிதட்டிப் பார்க்கிறேன் தொல்காப் பியயாப்பு
நேசிப்பா யாபின்னும் நீவெண்பா வில்சொன்னால்
பேசிடும் உன்தமிழே போதும்என் பாயாசொல்
மாசிலாயென் வெண்ணிலா வே

-------- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
அடி எதுகை ---ஈசி தூசி நேசி பேசி மாசி

ஈசிச்சேர்--பயன்பாட்டிலுள்ள ஆங்கிலச் சொல் எதுகை ஓசை கருதி

1 3 ஆம் சீரில் மோனை--- ஈ எ தூ தொ நெ நீ பே போ மா வே

எழுதியவர் : கவின் சாரலன் (24-Nov-24, 9:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே