நேசமிகு காதலியே

நன்மதியே நன்நிதியே நன்நதிக் காவிரியே
பொன்மகளே பூவிழியே புன்னகை வெண்நிலவே
தென்பாண்டி முத்துமின்னும் தேனிதழ்ப் பேழையே
தென்பொதிகைச் செந்தமிழே தென்றலின் தேவதையே
நின்றுநின்று கால்வலி நேசமிகு காதலியே
இன்னும் வரவில்லை இன்றுநீ ஏனோசொல்
மின்ன லெனவிரைந்து வா

----ஏழு அடி பெற்ற ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

அடி எதுகை --நன் பொன் தென் தென் நின் இன் மின்

1 3 ஆம் சீரில் மோனை -- ந ந பொ பு தெ தே தெ தெ நி நெ இ இ மி வ

எழுதியவர் : கவின் சாரலன் (23-Nov-24, 6:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : naesamigu kathaliye
பார்வை : 53

மேலே