சொல்லத்தான் நீநினைத்தாய் சொல்லாமலே சென்றாய்

மெல்லிய மேலாடை மேனி தழுவிட
அல்லியின் காதலன் ஆகாயத் தில்பொழிய
சில்லென்ற காற்றில் சிலிர்த்திடும் தேவதையே
மெல்லத்தான் நீசிரித்தாய் மஞ்சள் நிலாவினில்
சொல்லத்தான் நீநினைத்தாய் சொல்லா மலேசென்றாய்
சொல்லத்தே வையுண்டோ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Nov-24, 5:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே