உரைத்தாலுஞ் செல்லாது உணர்வு - நேரிசை வெண்பா

உரைநடையைப் பாட்டென்(று) உவந்தெழுதின்..?
இருவிகற்பக் குறள் வெண்பா

உரைநடையைப் பாட்டென்(று) உவந்தெழுதின் நல்லோர்
சிறப்பெனச் சொல்லார் செறிந்து! 1

நேரிசை வெண்பா

உரைநடையைப் பாட்டென்(று) உவந்தெழுதின் நல்லோர்
கருத்துச் செறிவில்லை கற்று - வரவும்
எருவிற்காம் கூமுட்டை என்றே குறிப்பாய்
உரைத்தாலுஞ் செல்லா(து) உணர்வு! 2 - வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-24, 8:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே