கணத்திலுண்ணை உணர்ந்திடவும் முடியுமா இன்தமிழே

பண்பிலே உயர்ந்தவளே,
என்ன நானுன்னை பாடுவேன்.
உலகத்தின் மூத்தவளே,
என்ன நானுன்னை பாடுவேன்.

காற்றிடமும் கொஞ்சம் கேட்டேன்,
ஆற்றிடமும் கொஞ்சம் கேட்டேன்.
உகத்திலே உன் உருகண்டு,
தவத்திலே மூழ்கி விட்டேன்.
அகத்திலே நீ வந்தாய்,
சுகத்திலே மூழ்கி விட்டேன்.
உந்தன் பெருமை உணர்ந்திடவே,
பல பிறப்பு வேண்டுமம்மா.

கணத்திலுண்ணை உணர்ந்திடவும்,
முடியுமா இன்தமிழே.
மனத்திலே திறமும் கொண்டேன்,
உன் இளமையில் மயங்கினேன்.
செம்பொருளே உந்தன் நிலை கண்டு,
செயல் மறந்து நின்றேனே.
சீரிளமை உகம் அடைவதற்கு,
இங்கு நீயும் வாழ்த்திடுக.

எழுதியவர் : Golden vibes (23-Nov-24, 3:22 pm)
பார்வை : 66

மேலே