கடலோடி

நீரும், நீல வானும்
கைகோக்கும் தூரம்
படகிட்டு ஓங்கிய
ஒக்கி புயலால்
திசை மாறி...
வெம்மை காற்றில்..
படகுடைந்து
நடுக்கடலில் நீந்தி
உடல் ஊறி..உப்பு நீர்..
உணவாய் உண்டு
தாயில்லா பிள்ளை போல்
வாயில்லா பூச்சிபோல்
கண்ணீரால் கடலுக்கு
உப்பேற்றி…
தத்தளித்து நின்றான்..
தமிழ் மகன்..
காப்பாற்ற யாரும் இல்லை
மீட்க ஒருவரும் இல்லை...
காப்பவர் எல்லாம்...
நூற்றாண்டு விழா எடுக்க...
தேர்தல் பணி முடிக்க
விரைந்து கொண்டனர் ..
கடமையை மறந்தனர்…
எத்தனை எத்தனை போர்
கப்பல்கள் வலிமை
கொண்ட வானூர்திகள்
செயற்கைகோள் கருவிகள்
பேரிடர் மீட்பு குழுக்கள்..
எல்லாம் மக்கள்
உயிர் காக்க அன்றி.
வேறு யார்க்கு…
கண்கள் நமக்கும் உண்டு
கருதும் வன்மையுண்டு...
எதையும் கேளாமல்
செவிட்டு பிண்டமாய்..
பெண்டு பிள்ளை..
காத்து வாழ்வோம்..
பின் சாவோம் நாம்...
என்னருந் தமிழ்நாட்டில்
இன்னொரு இழி நிலை
இனிவேண்டாம்…

எழுதியவர் : (13-Dec-17, 6:50 pm)
பார்வை : 223

மேலே