அயோக்கியன்
வளைந்து கொடுத்த வயல்
வாய்தா கட்ட தவறுவதில்லை
ஏனோ தெரியவில்லை.....
மக்கள் பிரதிநிதி சில்லரையை இறைத்து
நக்கலாக சிரித்து வாக்கு பிச்சை எடுக்க
வாக்கு சாவடி வலைத்து போடுது ....
ஐந்தாண்டு கடக்க
வாக்காளர் பெரும் துன்பம் ஏற்க
மான்புமிகு மிகவே தலைகணம் பெருக்க
கடவுச் சொல் அயோக்கியன் என
தொகுதி முத்திரை குத்தியது ....இப்போ
பெயர்ச் சொல் தொட்டி தோறும் ஜொலிக்கிறது !
ஏன் என்று கேட்க தோனுமே !
ஒன்றை சொல்லுகிறேன்..... கேளும் !
சேர்த்த கூட்டம் சேராதா கூட்டம்
பட்ட துன்பம் ஒன்றா இரண்டா ?
குடிசை ஓலை கதவு கதருகிறது !
மான்புமிகு காலம் தாழ்த்தாமல்
தலை குணிந்து உள்ளே வந்து ஓட்டு கேட்பாயாக....!