புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆம்
சொல்ல வேண்டிய ஒன்றுதான்
விழித்தால் தான் நிஜம் எனும்
வாழ்க்கையில் மனிதர்கள்
ஆடும் ஆட்டம் எத்தனை எத்தனை
மறக்காதீர்கள் வாழ்த்து பரிமாற
எல்லாருக்கும் ஒரே தினமாக
இருப்பதில்லை ஏனோ எந்த பண்டிகையும்
ஒருவருக்கு பிறந்த நாள்
மற்றவர்க்கு இறந்த நாள்
ஓர் சிலருக்கு மகிழ்வின் உச்சமாய்
இன்னும் ஒரு சிலருக்கு துக்கமாய்
இருந்தும் மறப்பதில்லை வாழ்த்து சொல்ல
இந்த நிச்சயம் இல்லா வாழ்க்கையில்
இனிவரும் ஆண்டாவது
எல்லாருக்கும் எல்லாமென
கொடுதருள்வாய் இறைவா
என் வேண்டுதல் பிழையா...
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்