சிலநேரம் இப்படித்தான்
நெரிசலில் அலசுகின்ற குரல்களின் நடுவில்
எதையோ அவிழ்க்க எண்ணி
தன்முனைப்பில் விட்டுவிடுகிறேன்.
சிலசமயம் அசைப்போட்டுப் பார்க்கிறேன்.
சந்தித்த துரந்தங்கள்
முன்னால் காண்கிறேன் .
மனசு அதிலுள்ள தளர்ச்சி
நான் உணருறேன்.
எனக்கு அதில் தீராத வேதனை
இருக்கிறது.
யாரிடத்தில் நெருங்கும்போதும்
சத்தியத்தில்
நான் எதிர்ப்பார்த்தது என்று
எதுவும் இருந்ததில்லை
எண்ணப் பாய்ச்சல்களுக்கும் நதியலைகளுக்கும் இடைப்பட்ட கடும்பாறை அறைதல்களில்
நிபந்தனைகளை எப்படி எப்படியோ
சமன் படுத்திவிடுகிறது காலம் .
ஏதும் செய்யாமல்
முள்ளாணியில் பிடைந்த
ஒரு காலகட்டம்
வழிகளுக்கு முன்னால் பாதையிட்டுப் போகிறது.
என் ஒளிஜாலங்களில் அகப்படும்
ஓரோரு முகமும்
நிசப்தமாய்
விழிகளுக்கு முன்னால்
படமெடுக்கிறது .
என் ஏது எழுத்துருக்களாலும்
நிரப்பிடமுடியாத
எத்தனையோ வான்பரப்புகளை
அங்கே நெக்குருகிக் காண்கிறேன்.
இருக்கலாம்
ஒரு வேளை துன்பங்களின் அதிநேசிகளே
கதைகளுக்கான காரணிகளாகலாம்.
காரணிகளே இல்லாத
சிலநேரம்
Top floor tolet என்பதைப்போல
தனிமை (blank mind)
ஒருப் பெயமாற்றம் கொடுக்கலாம்.
ஆம் அப்பொழுது
ஒரு சவம்போல உலறிய முகத்தோடு
கற்பனை சக்திகள்
விட்டுவீழ்ச்சி செய்து அகன்று போகின்றன.
விலையாட்டுகளில் கோர்த்த நூலிழைகள்
அவிழ்க்கமுடியாத
அவஸ்த்தையில் ஆகும் காலம்
சமநிலை இழந்துவிடுகிறது
எதார்த்தம் .
இயற்கையின் முன்பில் பதறாது நின்றாலும்,
அது
தளரவேச் செய்தது.
அடிக்கால்களை
பிடித்துநிற்கும் மண் பாங்கு
ஒருநேரம் விலகிப் போனதுப்போல.
பிடித்து நிற்க
ஏதாவது தாங்கு சுவர் இருக்குமா எனத் தேடுகிறது.
பிறப்பித்த கதாபாத்திரங்கள்
ஒன்றுக்கூடி
தோற்கடிக்கத் தொடங்கியதை
உணரும்போது
எதார்த்த பிரங்ஞை அசைவிழக்கிறது.
கருக்கல் நீக்கானுள்ள பாதையில் கனம் வாங்கிப் போகிறது விதி.
அமர்ந்திருக்கப் போவது யார்த் தலையின்மீதோதானே.
முறைக்கு ஆயிரம் இதயங்கள்
ஒருசேர துடிக்கும் வலி.
திறந்த ஜன்னல்களில்
காத்துக் கிடக்கின்ற நிலவுகாலம் போல
சுற்றுபாடுகளைக் காண்கிறேன்.
பிரகிருதி கொடுக்கின்ற
சில மழைத் துளிகள் போதும் மனதோரங்களில் ஓலங்கள் எழுப்பிட. இதெல்லாமே இல்லாமற்போகட்டுமே. கிளர்ச்சிக்கு வேண்டிடும் குட்டிக்கதைகள் போலன்னும் சொல்லிக்கொள்ளலாம்.
அந்த ஓலங்களுடைய சாய்வாட்டம்
என்றென்றும்
என் கைவசமிருந்தும்
இயக்கமறுத்துவிட்டேன்.
இந்த நீட்சி எதற்கென்றுத்தெரியாமலேயே
கட்டுண்ட காலங்களுக்குள்
எல்லாப் பக்கங்களின் மௌனமும்
இடம் மாறி இடம் ஏதோ கிறுக்கி அழிக்கின்றன.
பைராகி