கல்லூரிக் காலமது
சிறகடித்து பறக்கும் காலம்
அன்பை பகிரும் காலம்
அணைத்து மகிழும் காலம்
கல்வி கற்பதும
கற்பனையில் மிதப்பதும்
கதைகள் பிறப்பதும்
காதலில் தவழுவதும்
அன்பில் அணைப்பதும்
ஆனந்த கடலில் திளைப்பதும்
கல்லூரிக் காலம்
எத்தனை காலங்கள் வந்தாலும்
கல்லூரிக் காலம் போலாகுமா /
நினைப்பதெல்லாம் நடத்திடும் காலமது
அதில் கல்வியா செல்வமா வீரமா /
அத்தனையும் அத்துப்படி
நினைத்தாலே இனிக்கும் காலம்
கல்லூரிக் காலம்
அன்று நடந்ததெல்லாம் இன்று போல்
இனிமையாய் தித்திக்கிறதே
கல்வியில் ஊக்கம்
கற்பனையில் ஏக்கம்
எல்லாமே சுகமான காலம்தான்
கல்லூரிக் காலமது
கவலைகள் ஏதுமின்றி கல்லூரியில் ..