எங்கிருந்து வந்தாயோ

எங்கிருந்து வந்தாயோ
என் நொடிகளையெல்லாம்
எடுத்து சென்றது
உன் நினைவுகள் .....

என்னை மறந்து
உன்னையே நினைக்கிறேன்
உன்னுடன் செல்ல சண்டையிட்டதை
எண்ணும் போது சிறிய சிரிப்புதான் சிதறுகிறது ......

முதல் பார்வையில் பூக்கும் காதல்கள் பல
ஆனால்
முதல் பார்வைக்காக ஏங்குகிறது
நம் காதல் .....

சுற்றமும் மறந்து
சொப்பனம் காண்கிறேன்
சற்றென்று என் நினைவுகள்
என்னை எழுப்பினால்
கண்கள் உன்னை தேடும் ;
கனவு என கூறி
தலையில் செல்லமாய் தட்டி
தலையணை கொஞ்சம் கட்டி கொள்கிறேன்
புதுவிதமான உணர்வு ....

இதழொரம் புன்னகைப் பூக்கும் போது
நம் காதல் என்றும்
வாடாமல் இருக்க ஏக்கம் கொள்கிறேன் .....

உன்னை பார்க்கும் நொடியில்
ஒருவேளை
என்னை மறப்பேனோ ?
ஏனடா என் நொடிகளையெல்லாம்
எடுத்து கொள்கிறது உன் நினைவுகளே .....

எழுதியவர் : Deepikasukkiriappan (9-Jun-18, 9:53 am)
Tanglish : engirunthu vanthayo
பார்வை : 722
மேலே