அத்தை பெத்த அல்லிமலரே

அத்தை பெத்த அல்லிமலரே
அன்பு காதலன் நான்தான்டி..!
அந்திவான வெள்ளி நிலவாய்
அலைகிறேன் உனை வேண்டி..!

மனமகளாக உனை நினைத்து
மனம் முடிக்க நினைக்குறேன்டி..!
மனைவியாக வருவாய் என்று
மனதில் ஆசையே விதைக்குறேன்டி..!

உன் கண்ணில் எனை பார்க்க
என் கண்கள் கடவுளே வேண்டுதடி..!
உன் கனவில் நான் இருக்க
என் கவிகள் கடலாய் பெருகுதடி..!

உன் இமையின் இசை கேட்க
என் இதயத்தில் ஆர்வம் வெடிக்குதடி..!
உன் இதழின் பசி போக்க
என் இதழ்கள் ருசிக்க துடிக்குதடி..!

ஆதி முதல் அந்தம் வரை
என் ஆயுள் ரேகை நீதான்டி..!
ஆமாமென்று நீ சொன்னால்
ஆதாம் ஏவாலும் நாம்தான்டி..!

ஆமாமென்று நீ சொன்னாள்
ஆதாம் ஏவாலும் நாம்தான்டி..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (8-Dec-17, 8:43 pm)
பார்வை : 430

மேலே