srimathy - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : srimathy |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 24-Mar-1967 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 640 |
புள்ளி | : 34 |
நான் ஒரு குடும்பத்rn தலைவி......கவிதை எழுத எனக்கு மிகவும் விருப்பம். பல வருடங்களாக எழுதி வருகின்றேன் .
இசையே மொழியாய் கொண்ட ஊர்
ஏலேய் என்றன்பாய் அழைக்கும் ஊர்
நெல்லையப்பர் அருளும் ஊர்
தாமிரபரணி ஓடும் ஊர்
பழமை புதுமை கலந்த ஊர்
பக்திமணம் கமழும் ஊர்
படிப்பிற்கு சிறந்த ஊர்
பண்பாட்டில் மலர்ந்த ஊர்
வாஞ்சையோடு வாழும் இனம்
வருத்தப்படா தில்லு இனம்
கூடி வாழ விரும்பும் தினம்
கூட்டத்தை ரசிக்கும் மனம்
அல்வா போல இனிக்கும் குணம்
அரட்டை பேச்சை ரசிக்கும் தினம்
விருந்தோம்ப விரும்பும் குணம்
அருவா எடுக்க தயங்கா மனம்
சொல்லில் சிறப்பு அடங்காது
எழுத்தில் அடக்க முடியாது
நேரில் ஒருமுறை வந்துவிட்டால்
நெஞ்சை விட்டு அகலாது
இட்லிக்கு விஞ்சை விலாஸ் அல்வா விற்கு இருட்டுக்கடை
ஜவு
குற்றாலம் போவோமா
வகை வகையாய் அருவி உண்டு
வருட காத்திருக்கும் தென்றல் உண்டு
நிம்மதியாய் குளித்திடவே தனிவரிசை வசதி உண்டு
குற்றாலம் சென்றாலே குளிர்காற்று கூட வரும்
சாரலில் நடந்தாலே குதூகலம் கூட வரும்
உள்ளங்காலு குளிர்ச்சியிலே உடம்பெல்லாம்
சிலிர்த்து விடும்
அருவிக்கரை பக்கம் போனாலே அடிமனதில்
நடுக்கம் வரும்
இடித்து பிடித்து உள்ளே போனாலே
இடிபோல் அடியும் தலையில் விழும்
வெளியில் வரவும் மனமின்றி
வீட்டுக்கு செல்லும் நினைவின்றி
மணிக்கணக்காய் அருவியில் குளித்தாலும்
மனதின் ஆசை அடங்கிடுமா
வாளியில் குளித்த உடலுக்கு
அருவி குளியல் அலுத்திடுமா
குளித்து முடித்து வெளியில் வந்தால்
குற்றாலம் போவோமா
வகை வகையாய் அருவி உண்டு
வருட காத்திருக்கும் தென்றல் உண்டு
நிம்மதியாய் குளித்திடவே தனிவரிசை வசதி உண்டு
குற்றாலம் சென்றாலே குளிர்காற்று கூட வரும்
சாரலில் நடந்தாலே குதூகலம் கூட வரும்
உள்ளங்காலு குளிர்ச்சியிலே உடம்பெல்லாம்
சிலிர்த்து விடும்
அருவிக்கரை பக்கம் போனாலே அடிமனதில்
நடுக்கம் வரும்
இடித்து பிடித்து உள்ளே போனாலே
இடிபோல் அடியும் தலையில் விழும்
வெளியில் வரவும் மனமின்றி
வீட்டுக்கு செல்லும் நினைவின்றி
மணிக்கணக்காய் அருவியில் குளித்தாலும்
மனதின் ஆசை அடங்கிடுமா
வாளியில் குளித்த உடலுக்கு
அருவி குளியல் அலுத்திடுமா
குளித்து முடித்து வெளியில் வந்தால்
அப்பா .....
ஏன் மறந்தீர்களப்பா
என் ஆசையை தன் ஆசையாய் கொண்டவர்
என் தேவையை தன் தேவையாக்கியவர்
இல்லை என்ற சொல் எனக்கு இல்லாதாக்கியவர்
நானே சகலமென்று எனக்கு சகலமாகியவர்
உயிர் வாழ எல்லாம் கற்று தந்தவர்
உமது மறைவை மறக்க கற்றுத்தர மறந்ததேனோ !!
உயிர் கூட நான் தருவேன்
ஒளியெல்லாம் உன் வடிவாக
ஒலியெல்லாம் உன் குரலாக
மனமெல்லாம் உன் நினைவாக
கனவெல்லாம் உன் வரவாக
உன் நினைவினிலே நீந்துகிறேன்
என் நிலையினை மறக்கின்றேன்
ஒரு தடவை உன்னை காண
உயிர் கூட நான் தருவேன் ......அம்மா
மீண்டும் வந்துவிடு ......
நீயின்றி நானென்ற நாடகம் அது
பூவின்றி நீரற்ற தாடகம்.
சொல்லென்று நான் நின்று வேக
தள்ளென்று நீ கொன்று போக
விடமூட்டி சென்றாயடி தோழி நான்
திடமின்றி வீழ்ந்தேனடி பாவி.
கேளென்று கைபற்றி நோக்க நீ
வேலென்ற விழிவழியே தாக்க
பொய்யென்று போனேனடி அழுது என்
மெய் தின்று வீழ்ந்ததடி பொழுது.
வென்றுவர உடனிருந்த உன் ஆவி இனி
மென்று எனை நீ தீர்த்தாய் போடி.
உயிரோடு நானில்லை இன்று என்
உறவோடு நீயில்லை என்றும்
அரவோடும் நாணுறங்கி போவேன் மெல்
இரவோடும் கனவென்றும் ஆவேன்.
ஒன்னு சொல்லவா
என்றுதான் எப்போதும் கேட்பாய்
அந்த ஒன்றாய் இருக்குமோ
ஆவலில் துதிப்பேன் ....
சீ....துடிப்பேன்
நீ ஜாவா ப்ரோகிராம்மை
காட்டி அறுப்பாய் ...
எனக்கு தெரியும்
உன் சம்பளம் என்னவென்று
நீ வாங்கவிருக்கும்
கார் பற்றியும்கூட
நீ வாங்கி வைத்திருக்கும்
3BHK வீடு கூட
எல்லாம் தெரிந்த எனக்கு
தெரியவேயில்லை
உன் காதலை சொல்லபோகும்
நாள் பற்றி...
காதலியே...
என் கண்மணியே!!!
உயிரானவளே...
என் மனதிற்கு உடமையானவளே!!!
இதுவரை யாரும் தர முடியாத
காதல் கவிதையை
உனக்கு தர நினைத்தேன்..
காற்றை கொஞ்சம் கிழித்து
காகிதமாக்குவேன்..
மிண்ணும் வின்மீன் நுனியை உடைத்து பேனாவாக்குவேன்..
அதில் வானவில்லை உருக்கி ஊற்றி
மையாக்குவேன்..
உன் மேல் கொண்ட காதலை வர்ணிக்க
பால் வழி சென்று வார்த்தைகள்
தேடுவேன்..
தேடிய வார்த்தைகளையெல்லாம்
மேகங்களில் சேமிப்பேன்..
வரிகள் எங்கும் வாசம் வீச
புளுட்டோ சென்று
பூக்கள் பறித்து வந்து
அதன் நறுமணம் தெளிப்பேன்..
மலைகளை பிளந்து எடுத்து
புள்ளிகள் இடுவேன்..
நான் எழுதிய என் காதல் கவிதையை
உன் த
முன்னுரை :
பயணம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் அன்றாட தேவையாக உள்ளது .ஆனால் அவசியங்களை அகற்றி வைத்து ஆனந்தமாய் மகிழ்ச்சியை அள்ளிக் கொள்ளும் பயணம் சுற்றுலாவாய் மலர்சூடிக்கிறது .அப்படி ஒரு அழகிய பயணம் தான் என்னுடையதும் .
பள்ளிச்சுற்றுலா :
நான் இன்னும் ஒரு சுட்டிப் பெண் தான் .வயதும் கொஞ்சம் குறைச்சல் தான் .அங்கும் இங்கும் சுற்றிப்பறக்க ஆசைப்படும் வயது .ஆனால் என்ன செய்வது கல்விக்கற்க வேண்டும் என பள்ளிக்குப் புறப்பட்ட நாள் முதல் பள்ளிப்பருவம் முடியும் வரை பல ஆயிரம் எண்ணங்கள் பள்ளியிலே பதுங்கிவிட்டது .பயணம் என்பது தினமும் பள்ளி சென்றுவருவது என வழக்கமாகி விட்டது .
இதற்கு விருந்தாய் வந்தது
பெண்மை
தனித்தியங்கும் தன்மை வளர்த்து................
தன்னம்பிக்கையின் வடிவமாதல் நல்லதே
கவனமுடன் காரியங்கள் கையாண்டு...........
கண்ணியத்தின் வடிவமாதல் நல்லதே
அக்கறையுடன் ஆராய்ந்து நடந்து.............
அறிவுத்தெளிவின் வடிவமாதல் நல்லதே
இனியசொல்லுடன் இயல்பாய் இருந்து.............
இயற்கையின் வடிவமாதல் நல்லதே
பொறுமையின் பெருமை உணர்ந்து
பெண்மையின் வடிவமாதல் நல்லதே