என்ன சொல்ல போகிறாய்

காதலியே...
என் கண்மணியே!!!

உயிரானவளே...
என் மனதிற்கு உடமையானவளே!!!

இதுவரை யாரும் தர முடியாத
காதல் கவிதையை
உனக்கு தர நினைத்தேன்..

காற்றை கொஞ்சம் கிழித்து
காகிதமாக்குவேன்..

மிண்ணும் வின்மீன் நுனியை உடைத்து பேனாவாக்குவேன்..

அதில் வானவில்லை உருக்கி ஊற்றி
மையாக்குவேன்..

உன் மேல் கொண்ட காதலை வர்ணிக்க
பால் வழி சென்று வார்த்தைகள்
தேடுவேன்..

தேடிய வார்த்தைகளையெல்லாம்
மேகங்களில் சேமிப்பேன்..

வரிகள் எங்கும் வாசம் வீச
புளுட்டோ சென்று
பூக்கள் பறித்து வந்து
அதன் நறுமணம் தெளிப்பேன்..

மலைகளை பிளந்து எடுத்து
புள்ளிகள் இடுவேன்..

நான் எழுதிய என் காதல் கவிதையை
உன் தோழியான நிலவிடம் கொடுத்து
தூது அனுப்புவேன்..

அனுப்பிய கடிதத்தோடு
என் இதயத்தையும் இணைத்து
உன் காதலுக்காக
காத்துக்கொண்டிருப்பேன்!!!

என்னுயிரே!!!!

என் மனதில் மலர்ந்த மங்கையே!!!
என் உயிரில் கலந்த நங்கையே!!!
என் ஆண்மையை வென்ற
பெண்மையே!!!

அன்பே...
என் காதலை ஏற்பாயா???
இல்லை காரணம் சொல்லி நகர்வாயா?

உந்தன் பதிலை எதிர்பார்தவனாக,
❤சேக் உதுமான் ❤

எழுதியவர் : சேக் உதுமான் (26-May-18, 7:38 pm)
பார்வை : 490

மேலே