நெல்லை சீமை

இசையே மொழியாய் கொண்ட ஊர்
ஏலேய் என்றன்பாய் அழைக்கும் ஊர்
நெல்லையப்பர் அருளும் ஊர்
தாமிரபரணி ஓடும் ஊர்

பழமை புதுமை கலந்த ஊர்
பக்திமணம் கமழும் ஊர்
படிப்பிற்கு சிறந்த ஊர்
பண்பாட்டில் மலர்ந்த ஊர்

வாஞ்சையோடு வாழும் இனம்
வருத்தப்படா தில்லு இனம்
கூடி வாழ விரும்பும் தினம்
கூட்டத்தை ரசிக்கும் மனம்

அல்வா போல இனிக்கும் குணம்
அரட்டை பேச்சை ரசிக்கும் தினம்
விருந்தோம்ப விரும்பும் குணம்
அருவா எடுக்க தயங்கா மனம்

சொல்லில் சிறப்பு அடங்காது
எழுத்தில் அடக்க முடியாது
நேரில் ஒருமுறை வந்துவிட்டால்
நெஞ்சை விட்டு அகலாது

இட்லிக்கு விஞ்சை விலாஸ் அல்வா விற்கு இருட்டுக்கடை
ஜவுளிக்கு ஆரெம்கேவி, ஆடிதள்ளுபடிக்கு போத்தீஸ்
ஐஸ்கிரீம் னா அரசன் , சாப்பாடுனா ஜானகிராம்
குளிக்க குறுக்குத்துறை ,கும்பிட சாலைகுமாரர் கோயில்
பாலம்னா சுலோச்சனா முதலியார் பாலம்
புகழுக்கு திருவள்ளுவர் ஈரடுக்கு பாலம்

அன்புக்கு நாங்க எப்போ வரீங்க நீங்க .........

எழுதியவர் : ஸ்ரீமதி (24-Jul-18, 8:11 am)
சேர்த்தது : srimathy
Tanglish : nelai seemai
பார்வை : 219

மேலே