உன்னை அடைந்தது

சூரியனின் சுடர்விழி கொண்டவளே
சுவைக்க மறந்த மாங்கனியே
நீரின்றி நிஜமில்லை யாவும்
நீ இன்றி நான் இல்லை
நினைவு எல்லாம் நீ தான்
என்னுடைய நிறைவும் நீ தான்
நிகழ்காலமும் நீ தான்
நினைவுகாலமும் நீ தான்
யதர்க்கு இந்தக் கோபம்?
என் காலம் தாமதமா ?
இல்லை என் காதல் தாமதமா ?
உன்னை அடைந்தது
அந்தக் குட்டி கண்களின் கோபத்தை
குறைக்க கூடாத
கொள்ளை அழகே.

எழுதியவர் : சண்முகவேல் (24-Jul-18, 8:31 am)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : unnai adainthathu
பார்வை : 161

மேலே