அறைக்குள் நுழைந்தாள்
ஆயிரம் பூக்கள் அடுக்கிவைத்தேன் பரன்மேல்
அறைக்குள் நுழைந்தால் அவள்மேல் விழுமென்று
தோரண துண்டுகள் துவைத்து வைத்தேன்
வியர்த்தால் முகமேனும் துடைப்பாளென்று
தோதான இருக்கைகள் துடைத்து வைத்தேன்
இடமின்றி இடக்கையை தொடுவாளென்று
விழித்தால் கனவென மாயுமென்று
புரண்டேன் பின்னுமோர் நாழிகையும்
தடதடவென்ற தாழ்பாள் சத்தத்தில்
தடையேதுமின்றி தொகையிட்டதெல்லாம்
நடக்குமென்றிருந்தேன்
கேட்டிட்ட சத்தமென்னவோ
தெருமுனை டீக்கடைக்காரனது
நேற்றைக்கு தருவதாய் சொன்ன
பாக்கித்தொகையை இன்றைக்கே தரச்சொல்லி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
