சார்லி கிருபாகரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சார்லி கிருபாகரன் |
இடம் | : thoothukudi |
பிறந்த தேதி | : 28-May-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 951 |
புள்ளி | : 103 |
நான் நானாகவேயிருக்கிறேன்
நாடகங்களின் முடிவுகளிலும்
நான் நானாகவேயிருக்கிறேன்
நம்பிவிடு ஒன்றைமட்டும்
நான் நானாகவேயிருக்கிறேன்
நடுவழியில் பயணம் தெரிவுசெய்பவன் நான் அல்ல
பயணத்திற்காய் வழியை சமைப்பவன்
உனக்குத் தெரிந்த
நான் நானாகவேயிருக்கிறேன்!!
உதடுகள் ஒட்டாமல் உன்னை அழைத்தாலும்
உதடுகள் தொட்டே என்னை அழைக்கிறாய்
எனக்காய் நீ விட்டுக்கொடுத்தவைகள்
வரிசையிட முடியாதது
வெள்ளைக் குச்சிக்கு
விரல்முறுக்கியது முதல்
வேனற்கால சண்டைகள் வரை
எனக்காய் விட்டுக்கொடுத்தவைகள் -ஏராளம்
பள்ளிப் பயணங்களில்
என் சுமைகளையும் நீயே சுமந்து
விரல் பிடித்து நடந்திருக்கிறாய்
முகவரிகள் மாறிப்போனாலும்
சுகவரிகளையே சோதித்தறிகிறாய்
என்னை அறிந்த முதல் தோழி நீ!
என் உடன்பிறந்த இன்னொரு தாயும் நீ!!
உனக்கென உருகி உருகி
சொட்டுச்சொட்டாய் கரைகிறேன்
என் ஒரு விழி கண்ணீரிலும் நீ
காலங்களைக் கடத்துகிறாய்
உன்னருகில் இருப்பதை உணர்ந்தே நான்
உரைந்துகொள்கிறேன்
உன் உதடுகளின் உட்சரிப்புகளுக்குள்
என்னை மவுனமாய் அணைத்துக்கொள்கிறாய்
சில நேரம் நீ கூட
என்னை காயப்படுத்துகிறாய்
என் அரவணைப்புக்குள்
நீ இருந்தும்
வலிகளையே உணரச் செய்கிறாய்
கோடை கதிர் அவன்
ஓடவிட்டான்
மேலிருந்து கீழாக
ஆடைக்குள் ஓடையை;
வெப்பகாற்றும் வேகமாய்
பாய்ந்து
ஈரக்குலையின் ஈரமும் காய்ந்தது;
மலிவுகட்டண மாநகரபேருந்துக்காய்
மாநாட்டு கூட்டமாய்
மக்கள்
எண்ணெய் தொய்ந்த முகத் 'ஓடு'
நின்ற கூட்டத்தில்
வெந்த கிழவன்
கும்பிட்டு கொண்டானோ.......?!
இரைதேட
ஈயக்கம்பியில் பூமிதித்த காகம்
பொறுக்காமல்
கதரி கரைந்ததோ....?!
கோடை விடுப்பில்
குதுகலமான
மட்டைபந்து விளையாட்டை
முட்டு கட்டை போட்ட வெயிலை எண்ணி
தன் ஏட்டு மேகத்தை
குழந்தை ஏக்கதில் தொட்டதோ......?!!?
பசிக்கு வீசிய தானியமாய்
பக்தன் உடைத்த தேங்காயய்
பல துளிகளாய் மேகத்தண்ணீர் சிதற
வெயிலுக்கு
கோடி பேர்கள் இருந்ததுண்டு
என்னை மட்டும் உன் கண்கள் கண்டதேனோ
பொருத்தம் இல்லையென்று பலபேர் வெறுத்ததுண்டு
உனையும் நான் அப்படியே நினைத்ததுண்டு
தொட்டுவிட நீ எத்தனித்ததும்
தழுவிக்கொள்ள நான் தத்தளிக்கிறேன்
சுமைகளல்ல நீ எனக்கு
சுகமாகவே சுமக்கிறேன் - உன்
விரல்பற்றி நடந்த பொழுதுகளும்
எனைப்பற்றி நீ சிலாகித்த வரிகளும்
இன்னும் திகட்டாமல் இனிக்குதடா
உன்னோடு நான்கண்ட பொழுதுகள்
ஆயிரமாயிரம் என்றிருக்க
சட்டென தவிர்;த்தாயே
சடங்கென நினைத்தாயோ
சலனமற்றுக்கிடக்கிறேன் செருப்பென
நீ மீண்டும் வருவாயென
கோடி பேர்கள் இருந்ததுண்டு
என்னை மட்டும் உன் கண்கள் கண்டதேனோ
பொருத்தம் இல்லையென்று பலபேர் வெறுத்ததுண்டு
உனையும் நான் அப்படியே நினைத்ததுண்டு
தொட்டுவிட நீ எத்தனித்ததும்
தழுவிக்கொள்ள நான் தத்தளிக்கிறேன்
சுமைகளல்ல நீ எனக்கு
சுகமாகவே சுமக்கிறேன் - உன்
விரல்பற்றி நடந்த பொழுதுகளும்
எனைப்பற்றி நீ சிலாகித்த வரிகளும்
இன்னும் திகட்டாமல் இனிக்குதடா
உன்னோடு நான்கண்ட பொழுதுகள்
ஆயிரமாயிரம் என்றிருக்க
சட்டென தவிர்;த்தாயே
சடங்கென நினைத்தாயோ
சலனமற்றுக்கிடக்கிறேன் செருப்பென
நீ மீண்டும் வருவாயென
ஊடலும் கூடலும்----கயல்விழி
எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.
காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.
என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்
உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.
போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.
ஆனால்
தயவு செய்து
"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண
இடைவெளி இல்லா இரவுகள் தோறும்
இடையிடமாய் எச்சில் படுத்தியவென்
இதழ்களை இறுகக் கடித்தபடி
மெல்லினமாய் நீ
உச்சரித்த மகரமெய் ஒன்றுமட்டும்
அறைதனிலெங்கும் மோதி ஒலிக்குதடி
நண்பர்கள் (24)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

ப திலீபன்
பெங்களூரு

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்
