கற்பி ஒன்று சேர் புரட்சி செய்
ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்டோம்
அவமானமே அடையாளமாய்
அதிகாரம் மறந்தோம்
ஆளுமைகள் தொலைத்தோம்
கல்வி மறுக்கப்பட்டோம்
கழிவாய் ஒதுக்கப்பட்டோம்
உரிமைகள் உண்டென்றார் சிற்பி!
உன்னை நீ யார் என்று கற்பி!!
தன்மானம் மறைப்பதே
தகுமானம் எனச் சொல்லி
தன்னாள் தோறும்
தனியென நிற்கச் செய்தார் முன்
தடையேதும் இலவென்று ஒன்றுசேர்!
நீ தீண்டவும் சட்டம் இதுவே எனச் சொல்லி
யாண்டும் தீட்டென தள்ளி நின்றார் தனக்கும்
மீளவே செய்தான் சொற்படி நடந்திட
உனக்கும் கீழே கிடப்பவர் கோடி
சமனாய் நிற்கவே புரட்சி செய்! !!