நாங்க திருந்திட்டமுங்க

படிச்சயா, இங்க வாடாச் செல்லம்.
@@@@@@
என்னங்க உங்க பெண் குழந்தைக்கு
'படிச்சயா' -ன்னு பேரு வச்சிருக்கறீங்க?
@@@@@@
உங்க பொண்ணுப் பேரு என்னங்க?
@@@@@@
கிருத்தியா.
@@@@@@@
அந்தப் பேருக்கு என்ன அர்த்தமுங்க?
@@@@@@
அந்தப் பேருக்கு ஒரு அர்த்தமும் இல்லீங்க.
@@@@@@
அந்தப் பேரை உங்க பொண்ணுக்கு ஏன்
வச்சீங்க?
@@@@@
எங்க பொண்ணு கிருத்திகை
நட்சத்திரத்தில் பொறந்ததாலே
'கிருத்திகா' - ன்னு பேரு வைக்கலாம்னு
இருந்தோம். உலகம் முழுதும்
இலட்சக்கணக்கான பெண்கள்
கிருத்திகா -ங்கிற பேரை வச்சிட்டு
இருக்கிறாங்க. இப்பெல்லாம்
கிருத்திகையில் பொறக்கற பெண்
குழந்தைகளுக்கு 'கிருத்தியா' -னு பேரு
வைக்கிறது தான் நாகரிகமா இருக்குது.
அதனால நாங்க எங்க பொண்ணுக்கும்
'கிருத்தியா' -ன்னு பேரு வச்சுட்டோம்.
@@@@@@
நாங்க இந்த அர்த்தமில்லாத பேருக்குப்
போட்டியாத் தான் எங்க பொண்ணுக்கு
'படிச்சயா' -ன்னு பேரு வச்சோம். நாங்க
சிந்திக்காம பேரு வைக்கலீங்க. நட்சத்திரம்
இராசியைப் பத்தியும் நாங்க
கவலைப்படல. நல்ல சூழல்ல
பிள்ளைகளைப் படிக்க வச்சா நல்லாப்
படிப்பாங்க. நட்சத்திரமும் இராசியும்
அறிவை வளர்க்க உதவாது. சரி உங்க
கிருத்தியாவை நேத்து எதுக்கு அடிச்சீங்க.
ரொம்ப
நேரம் அவள் அழுகிற சத்தம் கேட்டுது.
@@@@@@@
அவளை வீட்டுப் பாடம் செய்யச்
சொல்லிட்டு 'மாமன்' படம் பார்க்கப்
போயிட்டோம். வீட்டுக்குத் திரும்பி வந்து
பார்த்தா கிருத்தியா வீட்டுப் பாடங்களைச்
செய்யாம விளையாடிட்டு இருந்தா.
அப்பறம் மாதாந்தரத் தேர்வுத் தாள்களை
எடுத்து காட்டினாள். பார்த்த எனக்கும் என்
மனைவிக்கும் அதிர்ச்சி.
@@@@@@@
என்ன ஆச்சுங்க?
@@@@
நாலு படத்தில் அவள்
'முட்டை' O மதிப்பெண்.
@@@@@@@
இது நான் எதிர்பார்த்தது தான். பெத்த
பிள்ளைகூட இருந்து வீட்டுப் பாடம் செய்ய
வைக்காம உங்களுக்கு திரைப்படம்
பார்ப்பது ரொம்ப அவசியம். கிருத்திகை
நட்சத்திரம் கிருத்தியாவைப் படிக்க
வைக்கும்னு உங்கள் நம்பிக்கை. கடவுளும்
படிக்க வைக்கமாட்டார். நட்சத்திரம்
இராசியும் உதவாது. உங்க நம்பிக்கையும்
உதாவது. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி
தரும்.
@@@@@
ஐயா நீங்க சொன்னதுக்கு அப்பறம் நாங்க
திருந்தலின்னா நாங்க ஆறறிவு உள்ள
மனுசங்களே இல்லை. எங்க கண்ணைத்
திறந்ததுக்கு நன்றிங்க.