இறைவனிடம் வேண்டுகிறேன்

இறைவனிடம் வேண்டுகிறேன்


இளமைக்கு தனிமை இனிமை /
முதுமைக்கு தனிமை வெறுமை/

அறுபதிலும் காதல் வரும்/
மனையாளிடம் மட்டுமே வரும்/

காலம் சென்ற பின்னும்/
அன்பு வென்று நிற்கும்/

நூறு ஆண்டுகள் வாழ வேண்டி
ஆலய மணிதனை நீ அடி/

எட்டாத உயரத்தில் இருந்தாலும்/
தோள் கொடுத்த உனக்கு /

தோள் தருகிறேன் என்னவளே/
மறு பிறவி எடுத்தாலும்/

மனைவிக்கு நான்தான் துணை/
மனசெல்லாம் தினமும் அவள் நினைவில்/

இன்பமாக வாழ்ந்தாலும் அவளோடுதான் /
துன்பமாக இறந்தால் அவளோடுதான்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (15-Apr-24, 1:17 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 43

மேலே