குறளோடு கவிபாடு

குறளோடு கவிபாடு
+++++++++++++++++

படைப்பு அழித்தல் கடவுளின் செயல்/
காத்தல் ஆளும் அரசின் தொழில்/
சிறு வெள்ளத்தை அணைகளில் பாதுகாத்து/
விவசாயம் குடிநீர்யென பிரித்து வழங்குவதாக/

சிறுக சிறுக பொருள்களை பெருக்கி/
வருவாய்களை பகிர்ந்து செலவிட வேண்டும்/
வருமானம் மிஞ்சிய செலவுகளை தவிர்த்து/
வட்டிக்கு கடன் வாங்காது அரசே/

நல் அரசாக வள்ளுவர் உரைக்கிறார்/
நாட்டிற்கு மட்டுமல்லாமல் வீட்டிற்க்கும் பொறுந்தும்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (15-Apr-24, 1:19 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 30

மேலே