நகரத்தில் மழை

கோடை கதிர் அவன்
ஓடவிட்டான்
மேலிருந்து கீழாக‌
ஆடைக்குள் ஓடையை;

வெப்பகாற்றும் வேகமாய்
பாய்ந்து
ஈரக்குலையின் ஈரமும் காய்ந்தது;

மலிவுகட்டண மாநகரபேருந்துக்காய்
மாநாட்டு கூட்டமாய்
மக்கள்
எண்ணெய் தொய்ந்த முகத் 'ஓடு'

நின்ற கூட்டத்தில்
வெந்த கிழவன்
கும்பிட்டு கொண்டானோ.......?!
இரைதேட‌
ஈயக்கம்பியில் பூமிதித்த காகம்
பொறுக்காமல்
கதரி கரைந்ததோ....?!
கோடை விடுப்பில்
குதுகலமான‌
மட்டைபந்து விளையாட்டை
முட்டு கட்டை போட்ட வெயிலை எண்ணி
தன் ஏட்டு மேகத்தை
குழந்தை ஏக்கதில் தொட்ட‌தோ......?!!?

பசிக்கு வீசிய தானியமாய்
பக்தன் உடைத்த தேங்காயய்
பல துளிகளாய் மேகத்தண்ணீர் சிதற‌
வெயிலுக்கு மாற்றுகிடைத்த‌
கிழவன் நிம்மதியில்;
கரைந்ததால் விரைந்ததாய்
காகம்
மகிழ்ச்சியில் ;

நீர்தெளித்து சூடாற்றி
ஆட்டகளம் செப்பனிட்டதால்
குழந்தை
குதுகலத்தில்;
அதனையையும் கொடுத்துவிட்டது
அந்த‌ பெருமழைத்துளிகள்
ஐந்தாறு பெருமணித்துளிகளில்..

இந்தனை அழகாய்
இவ்வளவு நடந்தும்;
ஏறெடுத்து ரசிக்க இயலாத எந்திரமாய்
எதனையோபேர் நடக்க;
அவர்களோடு நானும்
அவசரமாய் அலுவலுக்காய்;

அத்தனை எதிர்பார்ப்பிலும் ஆனந்தம்
அந்தமழையால்....
எனக்கு தெரிந்தது
அந்த மழை
"நிலமகளின் நெஞ்ச வெப்பதை குறைக்க‌
இயற்க்கைத் தாய் வைத்த எண்ணெய்"

எழுதியவர் : அருண் குமார் (4-Aug-16, 8:59 pm)
பார்வை : 161

மேலே