லாகிரிப்பூக்கள்

கண்ணீர் வாடை
தாங்காமல்
எனதிரவை
வடிவமைக்க
வந்தான் இறைவன்.

யட்சிகளின் மோகன
மொக்குகளை என்
காலடியில் வைத்தான்.

யன்னல் திறந்ததும்
வெளியேறும்
ஊழித்தீயின்
உஷ்ட்ணமென்றான்.

காமதேவதையின்
வஸ்த்திரங்களை தலையனைக்கடியில் வைக்கப்பனித்தான்.

சயணத்தின்
சுனையென அவள் தனங்களைக்காட்டினான்.

லாவண்யம்
மிகுந்த கனவுகளை
ஆதூரமாய் என்
அறையெங்கும் தூவினான்.

புரையோடிய
காயங்களில்
பூவிதழை
கிள்ளி வைத்தான்.

முயங்கும்
உடலெங்கும்
சூல் கொள்ளும்
லாகிரிப்பூக்களோடு
உறங்கென்றான்.

பவித்திரம் மிகுந்த
அவ்விரவை
அவன் எனக்கு
பரிசளிக்கையில் உங்களில்
யாரது என் வானத்தை விடியச்செய்தது.?

நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (4-Aug-16, 9:53 pm)
பார்வை : 72

மேலே