நிலாகண்ணன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நிலாகண்ணன்
இடம்:  கல்லல்- சென்னை
பிறந்த தேதி :  02-Mar-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jun-2015
பார்த்தவர்கள்:  1556
புள்ளி:  943

என்னைப் பற்றி...

கவிதை விரும்பி.rnகாதல் திருமணம்.rnஅழகான குந்தைகள் இரண்டு.rnவாழ்வது சென்னை.rn

என் படைப்புகள்
நிலாகண்ணன் செய்திகள்
நிலாகண்ணன் - rameshalam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2016 11:58 am

ஓயாமல் தேய்ந்து
இணையாமல் மிதந்து
கருமை படர்கிறது நிலவு .

சுற்றிப் பறந்து
சிறகொடிந்து கிடக்கிறது
இன்று தோற்றவனின் கனவு .

அவன் கண்களில் ததும்பும்
உடையாத நீர்க்குமிழியோ
கடல் மீது மிதக்கிறது .

முயற்சியின்
கிளர்ந்த கணம் ஒன்றில்
முனகித் திரும்புகிறது
வாழ்வின் குரல் .

அந்தக் கணத்தின்
இருளின் இசை திறந்து
முகிலுக்குள் சுழல்கிறது
அவன் கழுத்துப்
பூவின் சிறகுகள் .

துடிப்புகள் அதிகமாகி
திசை மீறிய கருவாகி
அவனின்

பரிதியாய் விடிகிறது பகல் .

மேலும்

ரொம்பவும் நன்றிகள் சர்பான் . 05-Nov-2016 8:22 pm
வாழ்வின் குரல் தனக்குத்தானே எதிரொலிக்கிறது 05-Nov-2016 5:17 pm
நிலாகண்ணன் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2022 2:47 am

நித்தமு மிறையொடு நிற்கிற மனமெடு
நித்திய வரமது தருவானே
நித்திரை யிலுமவ னுற்றுணை யெனவர
நெற்றியி லுளவிழி யருளாமே

சித்தமு மமைதியி லுட்படு கிறநிலை
செப்பிட வழிமுறை தருவானே
சுத்தமொ டுளமுரு கித்தொழு திடஇறை
சொக்கனு மதிலுரு கிடுவானே

புத்தியி லுறைகிற கெட்டவை விலகிட
விட்டெமை சுகமுற விடுவானே
புத்தக மவனது வித்தக மதைபெற
பக்தியி லொழுகுத லழகாமே

எத்தனை துயருனை யெட்டிய பொழுதிலு
மத்தனை யுமவன ருளினாலே
எட்டிடி விலகிடு தற்கொரு வழிதரு
விப்பவ னடிதொழ மறவாதே!

மேலும்

நான் இங்குதான் இருக்கிறேன். எங்கு எதை எழுதினாலும் அதை இங்கும் பதிவிட்டுக்கொண்டு இருக்கிறேன் நிலா. 27-Jan-2022 1:46 am
நல்லாயிருக்கு அண்ணே.இங்க வந்து எவ்வளவு நாள் ஆச்சு தாய் வீடு வந்ததுபோல உணர்கிறேன் 26-Jan-2022 11:32 am
நிலாகண்ணன் - எண்ணம் (public)
26-Jan-2022 11:19 am

எல்லோரும் நலமா

மேலும்

நிலாகண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2016 6:45 am

இரவையும் பகலையும்
இருபக்கச்சிறகாக்கி
பறக்கிறது
காலப்பறவை
அப்பறவைக்குள்தான்
நாம் இருக்கிறோம்
என்பதை அறியாத
நீயோ
கிளி வளர்க்க
ஆசைப்படுகிறாய்.

நிலாகண்ணன்

மேலும்

உண்மைதான்..பூரணம் இல்லாத நிலையில் பல மனிதர்களின் நிலை 07-Aug-2016 7:29 am
நிலாகண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2016 9:53 pm

கண்ணீர் வாடை
தாங்காமல்
எனதிரவை
வடிவமைக்க
வந்தான் இறைவன்.

யட்சிகளின் மோகன
மொக்குகளை என்
காலடியில் வைத்தான்.

யன்னல் திறந்ததும்
வெளியேறும்
ஊழித்தீயின்
உஷ்ட்ணமென்றான்.

காமதேவதையின்
வஸ்த்திரங்களை தலையனைக்கடியில் வைக்கப்பனித்தான்.

சயணத்தின்
சுனையென அவள் தனங்களைக்காட்டினான்.

லாவண்யம்
மிகுந்த கனவுகளை
ஆதூரமாய் என்
அறையெங்கும் தூவினான்.

புரையோடிய
காயங்களில்
பூவிதழை
கிள்ளி வைத்தான்.

முயங்கும்
உடலெங்கும்
சூல் கொள்ளும்
லாகிரிப்பூக்களோடு
உறங்கென்றான்.

பவித்திரம் மிகுந்த
அவ்விரவை
அவன் எனக்கு
பரிசளிக்கையில் உங்களில்
யாரது என் வானத்தை விடியச

மேலும்

ஞானம் வாழ்க்கையில் உணரப்பட வேண்டிய ஒன்று..நீங்கள் அதனுள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் 07-Aug-2016 7:26 am
rameshalam அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-May-2016 1:17 pm

நான் நாடோடி...

என் சிறகுகளுக்கு
எப்போதும் சொந்தமில்லை
எந்தக் காற்றும்.

முடியாத சாலையில்
வெளிச்சங்கள் சிதறி...சிதறி...
இருள் நீண்டுவிட...

திரும்பாத நாட்களில்
பயணிக்கிறது வாழ்வு.


வழியெங்கும் மிஞ்சுகிறது
திசை அதிர ...
ஒலித்துத் திரியும்
வாக்குறுதிகளின் பிழைகள்.

எனக்குப் பிரியமான மௌனம்
வாசித்துக் கொண்டிருக்கிறது
பூமியை...

பதிலற்ற கேள்விகளால்.

விற்கப்பட்ட வாழ்க்கையைக்
கடந்து போகிறேன்...
கண்களை இறுக மூடியபடி.

கையசைத்து
வழியனுப்பி வைக்கின்றன
நம் குழந்தைகள்
தங்களின் எதிர்காலத்தை.

என் ஆறாம் அறிவின்
சான்றுகள்
மடிகின்றன இங்கு
மழைகாளாங்களைப் போ

மேலும்

ரொம்பவும் நன்றிகள்! சார். 06-Aug-2016 5:47 pm
அற்புதமான கவிதை சார் 04-Aug-2016 9:25 pm
ரொம்பவும் நன்றிகள்! கவித்தாசபாபதி. 01-Jun-2016 12:27 pm
உண்மையை தரிசிக்கும் எத்தனையோ கணங்களில் இதைத்தான் உணர்கிறேன். ஆழ்ந்த கவிதை ... 31-May-2016 8:54 pm
rameshalam அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-May-2016 11:41 am

தூக்கமே இல்லாத நாட்களாக
வாய்த்திருக்கிறது.

வாழ்வின் இடைவெளியை
நிரப்பிய பகலின்
ஒப்பனைகள்...
ஒற்றை நிலவெனத்
தனித்திருக்கிறது இரவில்.

சுமை வீங்கி
நகரமுடியாத காலம்
மௌனத்தில் துவள...
குடைவிரித்துப்
படியிறங்குகிறது
தனிமை.

அர்த்தமின்மை நிரம்பி
திராணியற்ற கால்களால்
நகரும் இரவில்...

எனக்கு வாய்ப்பதற்கில்லை
நான் அமரும் நிழல்.

திசை தவறிய பறவையின்
பதற்றத்துடன்...
கடந்து செல்கிறது பகல்.

ஓயாத உராய்வுகளுடன்
காலத்தின் முட்கள்
என்னைக் கிளற....

எப்போதும்
பறப்பதற்குத் தயாராயிருக்கிறேன்
நான்.

மேலும்

நல்லது சார் இனிதே நடக்கட்டும். இங்குதானே என் வேர்கள் உண்டு எங்கு சுற்றியும் இங்கு வருவேன் அது ஒரு இளைப்பாறல் தாய்மடிபோல 07-Aug-2016 6:38 am
நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு எப்படி ? நூல் ஆக்கம் பாதியில் ..மீதியைத் தொடர்வேன் இன்னும் சில ஞாயிற்றுக் கிழமைகளில் .. 05-Aug-2016 2:49 pm
சபாபதி சாருக்கு என் நன்றிகள் 04-Aug-2016 9:22 pm
ரொம்பவும் நன்றிகள்! கவித்தாசபாபதி. 01-Jun-2016 12:30 pm
rameshalam அளித்த படைப்பில் (public) rameshalam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Jun-2016 10:56 pm

மென்மையின் கனத்தை
நினைவுபடுத்துகிறது மழைக்காலம்
குளிர் மெல்லும் சொற்களால்.
நீர் தளும்பும் முற்றத்தில்
ஈரம் காயாத நீர்த் தவளையெனக்
குதிக்கிறது நினைவுகள்.
மகிழ்வின் வெம்மையில்
இளைப்பாற நிழலின்றி
நிலவின் அடிவாரத்தில்
சரிகிறது புனைவுகள்.
அடைகாக்கும் சிறுமனதின்
யாருமற்ற நீள் வீதியில்
என்னை வருடிய இறகின்
மழை கசிய....

உங்கள் படுக்கையின்
சரிந்த ஏடுகளில்
வாசிக்கக் கிடைக்கிறது
அன்பின் மழை.

மேலும்

ரொம்பவும் நன்றிகள்! சார். 06-Aug-2016 5:44 pm
அற்புதமான படைப்பு 04-Aug-2016 9:17 pm
ரொம்பவும் நன்றிகள்! சர்பான். 14-Jun-2016 8:11 am
கவிதைகள் என்றால் நெஞ்சில் நுழைந்து கலையின் உதிர ஓடையில் உங்கள் வரிகள் போல் உறைந்திட வேண்டும் 14-Jun-2016 6:13 am
நிலாகண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2016 10:10 am

இறந்தவர்கள்
தத்தமது
புதைகுழிக்கு மேல்
அமர்ந்திருப்பதாய்
கனவுகள் வருகிறது.

கனவின்றி
நிம்மதியாய் உறங்க
இறைவனை
வேண்டினேன்.
கண்முன் -
தோன்றியவன்
எனது
கனவுகளைத்
தாழிடும் பொருட்டு
ஒரு பூட்டு
செய்து கொடுத்தான்.

பிரச்சனை
என்னவென்றால்
அப்பூட்டுக்கான
சாவியை
ஒரு
கனவுக்குள் ஒளித்துவைத்திருக்கிறேன் கண்டுகொள் என்கிறான்.

புதைகுழி மேலிருக்கும்
சாவியை எடுக்க
யாராவது
என்கனவுக்குள்
துணைக்கு
வாருங்களேன்

- நிலாகண்ணன்

மேலும்

உண்மையில் கவிதைகள் மனதில் பதியும் போது தான் வாசகனும் புரியாத ஓர் நிலையில் தவிக்கிறான்..உங்கள் கவிதை என்னை ஆள்கிறது 07-Aug-2016 7:23 am
நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) சுஜய் ரகு மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
19-Jun-2016 9:38 am

அவ்வனத்தில்
பாடும் பறவையையோ

பேரிரைச்சலோடு
சோவெனக்
கொட்டிக்
கொண்டிருக்கும் அருவியையோ

பூ நகரும்
நதியினையோ
பின்தொடரும் வண்ணத்துப்
பூச்சியையோ

தொன்மத்தின் விழுதாடும் பெருமரங்களையோ

பெருமரங்கள் கொண்ட
சிறுகூடுகளையோ

கிளை
தாவிக்கொண்டிருக்கும்
என் உறவுகளையோ

நான் பேன்
பார்த்துக்கொண்டிருந்த
என் பேரன்பையோ

காடு சேர்த்த
இந்த கனவையோ

கனவு சேர்த்த
இந்த உறக்கத்தையோ

அவ்வனத்தின்
யவ்வனத்தையோ

வில(ள)ங்கிட
முடியாதுனக்கு

உன் விலங்கின்
நீளம் நீதரும் சுதந்திரத்தை விட

அக்கனவு
அவசியமாகிறது

- நிலாகண்ணன்

மேலும்

அருமையான கவிதை. 24-Sep-2016 7:55 am
படமும் கவியும் போட்டிபோட்டு ரசிக்கவைப்பதோடு சில கணங்கள் நின்று யோசிக்க வைக்கிறது !! அருமை !! 04-Jul-2016 6:01 pm
அழகான படைப்பு...! வாழ்த்துக்கள்....! 27-Jun-2016 10:28 pm
நலம் தம்பி .. நெறைய பேர மிஸ் பண்றேன்.. ! 21-Jun-2016 10:42 am
நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Jul-2016 4:25 pm

தோற்றம் மறைவு
எழுதி மாலையிட்ட
மார்பளவு புகைப்படத்தில்
என் பிம்பம் படிய
நேரெதிராய்
சிலமணித்தியாளங்கள்
நின்று பார்க்கிறேன்.

இப்படித்தான் யாருமற்ற
தனிமையில்
இறந்து பார்ப்பது
அவசியமாகிறது

மேலும்

உண்மைதான்..சில நொடிகள் போல் தோன்றும் நேரங்கள் பல நிமிடங்களை களவு கொண்டு போகிறது வாழும் சொட்ப வாழ்க்கையில்.... இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jul-2016 5:24 am
ஒரு ஞானியைப் போல் யோசிக்கிறீர்கள் நண்பா !! மிக அற்புதம் !! 04-Jul-2016 5:59 pm
நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Jul-2016 4:33 pm

நாம்மை
யாராவது
பார்த்துவிடுவார்களோ
என்ற பயத்திலே
நாம்
பேசிக்கொள்வதில்லை.!

காதல் கடிதங்களை
நம் நண்பர்களின்
கைகளில்
கட்டியனுப்பிக்
கொண்டோம்.

நீ கொடுத்தனுப்பும்
கடிதம் உன் தோழி வழி
என் தோழன் வழி
என்னைச்சேர
இரு நாட்கள் ஆகும்..

செல்போன் டவர்கள்
இல்லாத வானத்தை
நான்காய் மடித்து
அனுப்பிவைப்பாய் நீ.!

அந்தச் சதுர வானத்தை
சட்டைப்பையில்
வைத்துக்கொண்டு
பூமியில் மிதப்பேன் நான்.!

நிறைந்த கடிதங்களில்
ஒன்று உன்
அப்பாவை எட்டிப் பார்த்துவிட
இரண்டு துண்டானது
காதலும் கடிதமும்..

தாவணி
கட்டவே குறிப்பெழுதி
வைத்திருந்த உன்னை,
சேலையில் சுத்தி
பார்சல் செய்துவிட்டார்க

மேலும்

காலம் தான் காதலின் இருப்பையும் தீர்மானிக்கிறது 05-Jul-2016 5:27 am
அந்தச் சதுர வானத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு பூமியில் மிதப்பேன் நான்.! மிக நல்ல வரிகள் நண்பா !! 04-Jul-2016 6:03 pm
செல்போன் டவர்கள் இல்லாத வானத்தை நான்காய் மடித்து அனுப்பிவைப்பாய் நீ.! அந்தச் சதுர வானத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு பூமியில் மிதப்பேன் நான் !! ரசனை அருமை !! ரசித்து ரசித்து வாசித்து ருசித்தேன் !! வாழ்த்துக்கள் !! 04-Jul-2016 5:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (216)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மு கா ஷாபி அக்தர்

மு கா ஷாபி அக்தர்

பூவிருந்தவல்லி , சென்னை .
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (217)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
கியாஸ் கலீல்

கியாஸ் கலீல்

தர்ஹா நகர்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (219)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மேலே