காலப்பறவை

இரவையும் பகலையும்
இருபக்கச்சிறகாக்கி
பறக்கிறது
காலப்பறவை
அப்பறவைக்குள்தான்
நாம் இருக்கிறோம்
என்பதை அறியாத
நீயோ
கிளி வளர்க்க
ஆசைப்படுகிறாய்.

நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (7-Aug-16, 6:45 am)
பார்வை : 161

மேலே