காதல் பாடல்
![](https://eluthu.com/images/loading.gif)
நேற்றுவரை நான் கருவாடு.
நீ நடந்து வந்தாய் என் தெருவோடு.
உன் பார்வைபட்டு எழும்பி விட்டேன் அட உயிரோடு
இனி ஆயுள்வரை நான் வாழ்ந்திருப்பேன் உன் கண்ணோடு .(நேற்று)
விழிவழியே நீ விதைத்து சென்றாய்
பருவத்தின் காதல் பயிர்
மொழிகளின்றி நான் பறித்துக்கொண்டேன்
எனக்கென்று புதிய உயிர்
என் தூங்கா மனம். உன் பூங்காவனம்
அந்த வானவில்லில் நிறமெடுத்த வண்ணத்துப் பூச்சி
நீ காமன் ரதிதேவிக்கு சின்னத் தங்கச்சி (நேற்று)
கோடையிலே பனி மலைகள் கரைந்து
நான் குளிர்ந்திட வந்த நதி
ஆடையிலே எழில் மறைத்திருக்கும்
நீ ஆதவன் இரசிக்கும் மதி
இரு கண்ணின் மடல் அது காதல் கடல்
பொங்கும் அலைதானோ உன்பூவிதழ் உதிர்க்கின்ற தேன்துளி
அது என்னை நனைக்கின்ற கன்னல் மழைத்துளி (நேற்று)
*மெய்யன் நடராஜ்