காத்திருப்பு

தூக்கமே இல்லாத நாட்களாக
வாய்த்திருக்கிறது.

வாழ்வின் இடைவெளியை
நிரப்பிய பகலின்
ஒப்பனைகள்...
ஒற்றை நிலவெனத்
தனித்திருக்கிறது இரவில்.

சுமை வீங்கி
நகரமுடியாத காலம்
மௌனத்தில் துவள...
குடைவிரித்துப்
படியிறங்குகிறது
தனிமை.

அர்த்தமின்மை நிரம்பி
திராணியற்ற கால்களால்
நகரும் இரவில்...

எனக்கு வாய்ப்பதற்கில்லை
நான் அமரும் நிழல்.

திசை தவறிய பறவையின்
பதற்றத்துடன்...
கடந்து செல்கிறது பகல்.

ஓயாத உராய்வுகளுடன்
காலத்தின் முட்கள்
என்னைக் கிளற....

எப்போதும்
பறப்பதற்குத் தயாராயிருக்கிறேன்
நான்.

எழுதியவர் : rameshala (30-May-16, 11:41 am)
Tanglish : kaathiruppu
பார்வை : 144

மேலே