ஆண்டவனக்கு ஏது அம்மா
படம் : தாலாட்டு பாடவா
பாடலின் மெட்டு: சொந்தமென்று வந்தவளே ஆத்தா
*பல்லவி:*
உன்னாலிந்த மண்ணில்வந்தேன் தாயே
கண்ணில்வைத்து காப்பவள்தான் நீயே
புண்ணானதோ பெற்று எடுக்க
பொன்னானகை என்னை அணைக்க
பத்துமாத பத்தியமா
பட்டதெல்லாம் போதும்மம்மா
*சரணம்:1*
பெண்ணா என்னை பெற்றால் என்ன
ஆணா என்னை பெற்றால் என்ன
பெறும்போது தாய்க்கு என்றும் குறையேயில்லை
கணவன் துணை நின்றால் என்ன
கட்டியவன் போனால் என்ன
கருவினிலே பார்த்து பார்த்து வளர்ப்பாள் அண்ணை
உதைக்கும் என்று...
உதைக்கும் என்று, தெரிந்திருந்தும் எனை சுமந்தவளே
கதைக்க செல்ல பெயரிட்டு எனை அனைத்துக்கொண்டாய்...
உன்னை போல என்னை
யாரறிவார் தாயே
அன்னைநீயே காவலம்மா
ஆண்டவனுக்கேது அம்மா
*சரணம்:2*
பள்ளிக்கூடம் போனாலென்ன
பட்டம்பெற்று வந்தாலென்ன
எந்நாளும் அத்தாய்க்கு குழந்தைதான்டா
தந்தையென்று ஆனால்லென்ன தாத்தன்னென்று ஆனால் என்ன
ஒரு நாளும் குறையாது பாசம்தாண்டா
தாயின் மடி....
தாயின் மடியில் தலை சாய்த்து நான் படுத்தாலே
தலை கோதி கவலைகளை மறந்திட செய்வாள்
பிறக்கும் உயிர்க்கெல்லாம்
பெற்றவள்தான் தெய்வம்
முந்தன் ஜென்ம புண்ணியமா
எந்தன் தாயே நீதானம்மா