மதனா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/ebcuz_9633.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மதனா |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 27-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 728 |
புள்ளி | : 215 |
என் சிந்தனை கருவறையில்
பூக்கும் இக்கவிதைகள்
நெஞ்சினை கொள்ளைகொள்ளும்
மழலை குழந்தைகள் -என
மகிழ்வுடனே பெற்றெடுக்கும்
மதனா...
அடுக்கு மொழி பேசி உனன அனைக்க காத்திருக்க
ஆசையை தூண்டிவிட்டு எனன அடங்க சொல்பவளே
மடக்கி பிடித்திழுத்து மாட்டிக்கொண்டேன், உன்னிடத்தில்
தடுக்கி விழுந்த என்னை தடுக்க நினையாதே
முறுக்கு மீசை உடைந்தது உன் முந்தானை சேலைப்பட்டு -
கிறுக்குப்பய என்னை மடியில் கிடத்தித்தாலாட்டு
நின்மடியில் நான் பிள்ளை ஆறடியில் ஆண்பிள்ளை
கைபிடியின் இதயத்தில், காதல் கலவரத்தால் தவறில்லை
தண்டிக்க நீநினைத்தால் தண்டனையில் பயமில்லை- சற்று
கண்டித்து எனன கட்டிக்கொள் இரவென்பதால் நினைவில்லை....
கண்ணியம் இல்லைதான் என் கண்களுக்கு உன்முன்னே - ஏதும்
சொல்லியும் கேட்பதில்லை விட்டுவிடு, உனக்கு புண்ணியமாகுமடி
கலகம்
கடன் கொடுத்தவர்களை
காண நேர்கையில்
நினைவுக்கு வருகிறது
சம்பள நாள்
**
வயிறு பெருக்கும் முன்பே
சிசு களைந்து விடுவதுபோல்
சம்பளப் பணம் நுழையும் முன்பே
மெலிந்துவிடுகிறது மணிபர்ஸ்.
**
விரலுக்குகேத்த வீக்கமாகத்தான்
உழைப்புக்கேற்ற ஊதியம்
என்றாலும்
வரவுக்கேற்ற வகையில்தான்
அமைந்து விடுவதில்லை செலவு.
**
முதலாளிமார்களின்
தாமதத்திற்கும்
கடன் கொடுத்தவர்களின்
அவசரத்திற்கும் இடையே
பட்டிமன்ற பொருளாகி
விடுகிறது சம்பளத்தொகை,
**
கைக்கு வரும் முன்பு
வளர்பிறை நிலவாகவும்
கைக்கு வந்ததும்
தேய்பிறை நிலவாகவும்
வளர்ந்து தேயும் சம்பளப்பணம்
எப்போதும்
முன்னேற்ற வானத்தில் ஒரு
சீனாவல பிறந்ததுதான் சிரிக்குது பாரு - நாம
சிந்திக்காம செஞ்ச தப்ப சரி செய்வதாரு
போனா வந்தா போகும் இடமெல்லாம் மோட்டாரு ஜோரூ- இன்னைக்கு நாம
போயுபுட்டா தூக்க இல்ல நாலு பேரு
சேத்துல விளையுற எல்லாத்துக்கும் மருந்து ஊத்திட்ட
உன் சோத்துலதான் விசத்த நீயே கலந்து தின்ங்குற
காத்தையும்தான் விட்டு வைக்காம ஓட்ட போட்டுட்ட
கடல்ல கலக்கும் ஆத்துலேயும் உன் கழிவ கலந்துட்ட
பாத்து ரசிச்ச பசுமையில பாதிய கானோம்
பாக்குரதெல்லாம் அழிக்குறதால நாம சாகதான் வேனும்
ஆட்டிபடைக்கும் மனிதா உன் அறிவ ஆராய்ஞ்சி பாரு
காத்தில் பரவும் கொரோனா ஏன் வேறுயிரை தாக்கல கூறு
- நந்தகுமார்
கொரோனாவின் குரல்
நாளையும் உனக்கு வேண்டுமென்றால்
நாளுக்கு பலமுறை கைக்கழுவு
சாலையில் கூட்டத்தில் நானிருப்பேன்
குறைந்தது மூன்றடி நீநழுவு
ஆலயம் மசூதி அலுவலகம்
அனைத்திலும் நானிருப்பேன் அண்டாதே
தேவைகள் இருந்தால் மட்டுமே
தெருவில் நடக்கலாம் மறவாதே
உலகம் உனக்காக மட்டுமே
என்று உவகைகொண்டாயோ மனிதனே
கவலைகள் கொண்ட பல்லுயிரின்
கண்ணீர்த்திவலையால் நான் வந்தேன்
தலைவலி காய்ச்சல் இருமலுடன்
உன்நுரையிரல் கெடுத்து கொன்றிடுவேன்
நின்தும்மல் இருமல் சளிமூலம்
உம்மிலிருந்து வெளிபடுவேன்
எம்மால் இனிநீ இறப்பதற்கு
என்றும் காரணம் நீயேதான்
எனை எதிர்த்து போராட வேண்டுமென்றால்
நோய்எதிர்ப்பு
நாளையும் உனக்கு வேண்டுமென்றால்
நாளுக்கு பலமுறை கைக்கழுவு
சாலையில் கூட்டத்தில் நானிருப்பேன்
குறைந்தது மூன்றடி நீநழுவு
ஆலயம் மசூதி அலுவலகம்
அனைத்திலும் நானிருப்பேன் அண்டாதே
தேவைகள் இருந்தால் மட்டுமே
தெருவில் நடக்கலாம் மறவாதே
உலகம் உனக்காக மட்டுமே
என்று உவகைகொண்டாயோ மனிதனே
கவலைகள் கொண்ட பல்லுயிரின்
கண்ணீர்த்திவலையால் நான் வந்தேன்
தலைவலி காய்ச்சல் இருமலுடன்
உன்நுரையிரல் கெடுத்து கொன்றிடுவேன்
நின்தும்மல் இருமல் சளிமூலம்
உம்மிலிருந்து வெளிபடுவேன்
எம்மால் இனிநீ இறப்பதற்கு
என்றும் காரணம் நீயேதான்
எனைஎதிர்த்து போராட வேண்டுமென்றால்
நோய்எதிர்ப்பு சக்தியுடன் போராடு
எலுமிச்சை நெல்லி பழங்கள
வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்று
நாட்டிற்கும் அதை செய்து தலைநிமிரு
ஆட்டுமந்தைப்போல் புல்தின்றுஅலைந்திடாது
மதிக்கொண்டு முறைப்படுவாய் மானிடனே
புவிவாட்டம் கொள்ளும் மற்றும் நீள்கடலும்
தடுமாற்றம் கொள்ளுதடா பல்லுயிரும்
உனதாட்டம் கொண்டு வெறுத்து நீஉமிழும்
மற்றும்மோட்டார் கரிமள வாயுத்துகளும்,
போட்டால் யாருக்கேட்பாரென்று,
நீபோட்ட நெகிழியெலாம்
முதுகேறிகுத்துவதை அறியாயோ?
மரமாகி கனிக்கொடுத்த விதைகளுக்குள்
தரமாக்க கலப்படத்தை நீசெய்தாய்..
உரமதுக்கும் இயற்கையோடு சேராது
உயிரியல் வளையத்தை உருக்குலைத்து விட்டாய்
உயிர்த்தோற்றம் முதலென்பது யாதுணர்ந்து
அதைதேற்ற வழிவகை செய்வாயோ
இதில
காத்துக்காத்தே
கவலைக்கிடமானது வாழ்க்கை.
கூத்துக்கட்டி, குதுகளப்படுத்தி,
கொண்டுபோனார் உங்கள் ஓட்டை.
சேர்ந்ததெல்லாம்! அவர்களிடம்தான்
செலவழிந்தது என்னவோ!
உங்கள் பணம்தான்.
உதிர்ந்தும் மலரும் வியர்வைத்துளிகள்
உங்கள் நெற்றியிலிருந்து மட்டும்.
மறந்தும் கூட பூத்ததில்லை - அவர்கள்
நாவரண்டு எட்சிலே முழுங்கியதில்லை.
கறந்துக் கொள்கிறார் இந்நாட்டை!
வெறும் கண்துடைப்பானது
அவர் வார்த்தை.
எல்லோருமொரே குப்பையென்று
மாறிமாறி ஓட்டளிதீர்
குப்பைமேட்டில் ரோஜாவுண்டு!
குட்டைகுலத்திலும் தாமரையுண்டு!!
ஆராய்ந்து பார்த்துத் தேர்ந்தெடுப்பீர்!
அதில் அரசியல் அவர்களுக்கு
கற்றுகொடுப்பீர்!
எ
இதில் யார் பிணம்..?
""""""""""""""""""""""""""""""""""""'''
ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒரு,
வீடு...!
வீட்டின் நடுவே,
அலங்கரித்து வைக்கப்பட்ட,
உயிரற்ற உடல்...!!
இறந்தவனுக்கு சொந்தமோ...
ஒரு வீடு...!
ஒரு ஏக்கர் நிலம்...!!
அதை,
பிரிக்க வந்தவர்களோ...
பத்து பேர்...!
இந்த சண்டை...
ஒருபுறம் இருக்க,
உடல் சுடுகாட்டை நோக்கி...
பிரயாணித்தது...!
இறந்தவனின்...
தந்தை ஒரு சாதி...!
தாய் ஒரு சாதி...!!
தந்தை வழியில்,
எரிக்கவேண்டுமாம்...!
தாய் வழியில்,
புதைக்கவேண்டுமாம்...!!
இந்த பிரச்சினை,
முடிவுக்கு வர...!
எந்த சாதி சுடுகாட்டில்,
எரிக்கவேண்டும் என்று...
ஒரு பிரச்சினை...
அந்தக் கிழவி
""""""""""""""""""""""
மாத இறுதி...
கையில்,
இருப்போ நூறு ரூபாய்...
அரசு மருத்துவமனை வாசல்...
சுருக்கங்கள் நிறைந்த ஒரு,
கை... என் கையை பிடிக்க...
பக்கென்றானது...
ஏய்... கிழவி...
என்ன வேணும்...?
காசுலாம் இல்ல போ...!
என்று சொல்லிவிடலாம் போல்,
இருந்தது...
உண்மையும் அதுதான்...
என்வாயில் வார்த்தை வருவதற்குள்...
அவள் முந்திக்கொண்டாள்...
தம்பி...
என்னால நடக்க முடியல...
என்ன கைதாங்கலா...
இந்த ஆஸ்பத்திரிக்குள்ள,
கூட்டி போறியா...
சரியென்று அவள் கையை...
நான் பிடிக்க...
நத்தை போல்,
எங்கள் பயணம் தொடர்ந்தது...
ஏங்கிழவி...
இங்க,
கூட யாரும் இல்லையா...?
இ
நீர்த்துப்போன தார்சாலையின்
வெப்ப சலனத்தால்
வியர்வை துளிகள்மலர
முகமோ வாடியது !
வெகுநேரமாய்
வெயிலை குடித்த கண்களில்
துளிகூட ஈரமில்லை
தொடர்..., வண்டிகளின் நெரிசலால்
தொடர்பற்று போனது
காற்றும் குளுமையும்
போக்குவரத்து சமிக்கையில்
சிகப்புவிளக்கிற்கு
நாக்கு வறண்டு நான் நிற்க
பச்சையோ கானல் நீரானது !
அலைபேசியில் அளவேயில்லாமல்
அலைகழிக்கபடும் என் அழைப்புகள்
நேற்றிரவே தொற்றிக்கொண்ட
அலுவலக கிலி
பகல்தொடர்ந்தும் பறக்கவேயில்லை
மாதயிறுதியில் மணிக்கணக்காய்
நேரம் ஓடுவதேயில்லை
மேலாளரின்,
மஞ்சுவிரட்டு மாடுகள்போல்
நாளெலாம் ஓடியும்
இலக்கை தொட்டேன் என்று
கண்ணில் உயிரை வைத்துகொண்டு
இன்று காற்றில் கலந்துவிட்டாய் - அப்பா
இந்த மண்ணில் உங்களை போல்
இனி யாரை நாங்கள் காண்போம்
விண்ணில் நட்சத்திரமாய் மின்னும் பிரிந்த உயிர்
என்று பிறர் சொல்லி கேட்டதுண்டு - அப்பா
உன்னை எந்த விண்மீனாய்
நான் என்று காண்பேனோ
அன்னை அடித்தாலும் அரவைனைத்து காத்தாயே
அத்தனை முறைதான் என்னை நாளெல்லாம் அழைத்தாயே - அப்பா
இனி என்னை உன்னைப்போல் யார் அழைக்கக்கூடும்
உன் உடலோடு இந்த வீடும் வெறிச்சோடி போகும்
நண்பர்கள் (71)
![மெய்யன் நடராஜ்](https://eluthu.com/images/userthumbs/f1/apzin_14641.jpg)
மெய்யன் நடராஜ்
punduloya srilanka
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![வாசு](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
வாசு
தமிழ்நாடு
![முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன்](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன்
விக்கிரவாண்டி
![பிரகாஷ்](https://eluthu.com/images/userthumbs/f3/bpuyt_35042.jpg)