அருண் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : அருண் |
இடம் | : அருப்புக்கோட்டை / சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-May-2012 |
பார்த்தவர்கள் | : 699 |
புள்ளி | : 101 |
நெசவாளி நான்.மூடநம்பிக்கை, சாங்கியம், சம்பிரதாய முறைகளின் பின்னணி அறிவியலை சிந்திப்பவன். இயற்கையை நேசிப்பவன். துகிலியல் பட்டயப் படிப்பு முடித்த ஒரு சாதாரண மனிதன்.
முகநூல் : https://www.facebook.com/Arun.thillaichedembaram
ஈமெயில் : thillaisaro@gmail.com
பெண் புத்தி பின் புத்தி என்று கேள்வி பட்டிருப்போம். அதன் உண்மையான பின்னணி என்ன?
மெதுவாய் நட
எண்ண ஓட்டங்களை
ஓடவிட்டபடி...
இயல்பாய் பேசு
மனமெல்லாம் ரணமாய்
வலிக்கையிலும்...
புன்முறுவல் செய்
செய்த செயலெல்லாம்
தோல்வியில் முடிந்தபின்னும்
சிந்தனை செய்
இயல்புக்குமாறான
கோணமனைத்திலும்..
புத்தகம் வாசி
சிந்தனை சக்கரம்
சுழலவிட்டபடி ..
நித்திரை செய்
நிதானமற்ற
நேரம் உணர்ந்தபின் ...
நாட்கள் நகர்த்து
வந்து போகும்
கவலை மறக்க ...
கடந்துசெல்
அசாதாரண வலிதரும்
தருணமனைத்தயும்...
மௌனம்கொள்
துன்ப நேரங்களை
கடந்துசெல்ல...
இயல்பாய் வாழ்
இயற்கையோடு
இசைந்தபடி..
எது என்னை வீழ்த்தியது?
களவு நிறைந்த உன் கண்களா?
மீசைக்குள் அடங்காத
உன் ஆண்மையா?
கனவுகளை கலைக்கும்
உன் அழைப்போசையா?
விறு கொண்ட விசாலமான நடையா?அல்லது
கைகளால் கோதிய உன் கேசமா? அல்லது
மென்மையான இதழ் அனுப்பும் தந்தி புன்னகையா?
திராவிட நிறமா?
திகட்டாத உன் அன்பா?
எது என்னை வீழ்த்தியது
எவ்வளவு யோசித்தாலும்
எத்தனை வருடமானாலும்
இன்றும் புரியவில்லை
நீ மகிழ்ச்சியாய் அசைந்தாட நான் இறுகிநிற்கிறேன்
மண்ணோடு மண்ணாக.
உனக்கான சத்துக்களெல்லாம்
என் மூலமே கிடைக்கிறது!
இதற்காகவே நான் இருள்மணலில். .
புதையுண்டுவாழ்கிறேன்.
அசைத்துவிட்ட காற்றோடு பேசும் சுகம்
உனக்கே கிடைக்கிறது,
ஊர்ந்து விளையாடும் அணில்சொந்தங்களும்
உண்டு உனக்கு.
செழித்து வியாபித்திருக்கும் கிளைகளே!
அனைத்தும் இல்லாமலேயே வாழ்கிறேன்.
இருந்தும் மறந்துவிட்டீர்கள் என்னை.
உன் மகிழ்ச்சியே எனதாய்
உணர்ந்தபடி நாட்கள் நகர்த்துகிறேன்.
பைத்தியக்காரர்கள்..
என்னை பைத்தியம்
என்கிறார்கள்....
காரணம்;
எல்லையின்றி காதலித்தேன்...
தமிழ் அவளை!!!!
மேல் நோக்கி எரிவது
தீயின் இயல்பு
கீழ் நோக்கிப் பாய்வது
நீரின் இயல்பு
மகிழ்ச்சியாய் இருப்பது
மனிதனின் இயல்பு
கவலைக்கு இருக்கலாம்
ஆயிரம் காரணம்
அவரவர் கவலைக்கு
அவரவரே காரணம்
மகிழ்ச்சியாயிருக்க
தேவையில்லை காரணம்
வாழ்வோம் மகிழ்ச்சியாய்
வருடங்கள் ஆயிரம்..!
- பா. மாறன்
டெல்லில் நிலவும் கற்று மாசு சென்னையில் வரக்கூடுமா?
டெல்லில் நிலவும் கற்று மாசு சென்னையில் வரக்கூடுமா?
நண்பர்கள் (324)

கவித்தலம் கைஅறிவழகன்
கவித்தலம்

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

கவிஞர் செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு
