எது என்னை வீழ்த்தியது

எது என்னை வீழ்த்தியது?
களவு நிறைந்த உன் கண்களா?
மீசைக்குள் அடங்காத
உன் ஆண்மையா?

கனவுகளை கலைக்கும்
உன் அழைப்போசையா?
விறு கொண்ட விசாலமான நடையா?அல்லது

கைகளால் கோதிய உன் கேசமா? அல்லது
மென்மையான இதழ் அனுப்பும் தந்தி புன்னகையா?

திராவிட நிறமா?
திகட்டாத உன் அன்பா?
எது என்னை வீழ்த்தியது
எவ்வளவு யோசித்தாலும்
எத்தனை வருடமானாலும்
இன்றும் புரியவில்லை

எழுதியவர் : மீனா (26-Nov-17, 11:54 am)
சேர்த்தது : மீனா
பார்வை : 274

மேலே