காதலின் முதற்படி

நான்கொண்ட காதலை
கணக்கிட இல்லை அளவுக்கருவி
என்காதலையே கொண்டு
உருவாக்குவேன் சிறு காதல்அருவி
வெற்றிலை மேனியிலோ
வழுக்கும் ஆடை பருத்தி
ஈரிதழ்கள் கொண்ட
உன் திருவாய் செம்பருத்தி
முத்தம் சிவக்கவைக்கிறது
உந்தன் வெந்நிலா முகத்தை
நாணம் புட்டுவைக்கிறது
உன் காதலின் இளமைப்பருவத்தை
உனக்கும் எனக்குமிடையே
அடிக்கடி சிறுமோதல்கள் ஏற்படும்
மோதலே பிற்காலத்தில்
காதலின் முதற்படியென்று கருதப்படும் !...