என்னோடு இரு

என் நிலவே எங்கே செல்கின்றாய்
உன்னை தேடி என் உயிரும் செல்கிறது!

என் அழகே என்றும் அழாதே
உன் அழுகை என்னை அழித்துவிடும்

என் தேவதையே என்றும் சிரிக்க மறக்காதே
உன் சிரிப்பு என்னை சிறகடித்து பறக்கத்தூண்டும்

என் அன்பே துக்கத்தில் வாடாதே
உன் துக்கம் என் நிரந்தர தூக்கமாகிடும்

என்றும் என்னோடு இரு
என் அருகில் எப்போதும் இரு

எழுதியவர் : நவின் (26-Nov-17, 10:09 am)
சேர்த்தது : Vijay Navin
Tanglish : ennodu iru
பார்வை : 396

மேலே