கவித்தலம் கைஅறிவழகன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவித்தலம் கைஅறிவழகன் |
இடம் | : கவித்தலம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 199 |
புள்ளி | : 19 |
நான் மரபுக்கவிதைகள் மீது மிகுந்த பற்றுடையவன்.கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். அதே வேளையில் புதுக்கவிதைகளையும் போற்றக்கூடியவன்.
கொடுநோய்ப் பட்டுக் குவலயம் தவிக்கும்
கொரானா காலத்திலும்
விடுப்பேதும் இன்றி விருப்புடன் மேனி
வியர்க்க வியர்க்க
அடுப்பங் கரையில் அயராதுழைக்கும்
அன்னையர் குலமே
தொடுக்கின் றேன்என் வாழ்த்தைத் தூய
தொழிலாளர் திருநாளில் .....
வருவாயே
(தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த .........தனதான )
கருவாக வந்து களமாக நின்று
கலங்கா திருக்கும் .... நிலைகாணும்
பொருளாசை யின்றிப் புதுவாழ்வு கண்டு
பொலிவா யிருக்க ..... நினைவேனை
இருளாகி நிற்கும் இடரோடி வீழ
இனிதா யுரைக்குங் ........ கவிவாழ
அருளாகி யென்ற னடினாவி னின்று
அழகா யுரைக்க ...... .வருவாயே
திருநாடே ..
தானன த(தானன தனன ......தனதான
னன .....தனதான )
நோயினி லுறைய ............ நொடிதாகி
நோவதென் நிலனே ............. பலநாளும்
ஆயிரந் துதியே ......... யழகாக
ஆவலி னறைவே ....... னினிதாகக்
கோயிலி னிறைவ ........ ரறியாரோ
கூழமு திலவே .......... குடியாவுந்
தீயெனும் பசியால் ...... திகழ்ந்தேகத்
தேரவே றிலையோ ........ திருநாடே ....
பவளச் சிரிப்பொலியே ;--என்
பச்சை ரத்தினமே ...
கவலை ஏதுமின்றி ;--என்
கண்மணியே விளையாடு
உங்கப்பா அயல் நாட்டில்
உனக்காக உழைக்கிறார்..'--என்
தங்கமே உனைப் பார்க்கப்
புலனவழி அழைக்கிறார் ..
தூக்கி விளையாடத்
துளி மலையின் சாரல் விழும்
நாக்கில் வழிந்தோடும் அந்த
எச்சிலுமே தேனமுதம்
தலைச் சாய்த்துப் பார்க்கையிலே
தாமரைப்பூ தோற்றுவிடும்
தாவிவரும் அழகைப் பார்த்து
மான்குட்டி வெட்கப்படும் ..
ஓவியமே என்தாயின்
உருவமது தெரியுதடி
உனக்காக என்னுயிரும்
வாழவேண்டும் புரியுதடி
வீட்டுக்குள் நாமிருந்து
வென்றெடுப்போம் சோதனையை
நாட்டுக்கு உறுத
சோழநங்கை நாவல் விமர்சனம்
முனைவர் கை. அறிவழகன்,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி,
நன்னிலம்.
இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வளர்ந்த புதிய இலக்கிய வகைகளுள் குறிப்பிடத்தக்கது புதினம் ஆகும். இதனை நெடுங்கதை என்று தமிழில் வழங்குவர்: ஆங்கில வழியே ‘நாவல்’ என்றும் அழைப்பர். இந்தப் புதின நூல்கள் கதைப் போக்கிற்கு ஏற்பப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றுள் வரலாற்றுப் புதினங்கள் என்பவை குறிப்பிடத்தக்கவை ஆகும். தமிழில் வெளிவந்த முதல் வரலாற்றுப் புதினம் மோகனாங்கி என்பதாகும். இதனை எழுதியவர் இலங்கையிலுள்ள திரிக
சித்திரை நன்னாளே சிந்தைக்கோர் பொன்னாளே
எத்தனை துன்பங்கள் எண்ணிலாத் தோல்விகள்
இத்தரை மீதிலே யாம்படும் பாடுகள்
அத்தனை சோகமும் மாற்றிடும் வண்ணமே
வித்தென நீதான் விரட்டு.
ஊரடங்கு ஊர்வலம்
தென்னை மரம்